• Login
Monday, June 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

‘திமுகவை தீயசக்தி என்று சொன்னவர் எம்.ஜி.ஆர்’ – மு.க. ஸ்டாலின் பேச்சுக்கு தவெக பதிலடி | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
June 29, 2026
in மலேசியா
Reading Time: 5 mins read
0
‘திமுகவை தீயசக்தி என்று சொன்னவர் எம்.ஜி.ஆர்’ – மு.க. ஸ்டாலின் பேச்சுக்கு தவெக பதிலடி | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை, திமுகவில் மாற்று கட்சியினர் இணையும் நிகழ்ச்சி சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் பேசியதாவது:- உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டுதான் முதல்முதலில் சட்டமன்ற உறுப்பினராக எம்ஜிஆர் வெற்றி பெற்றார். தனி கட்சி தொடங்கி முதலமைச்சராக இருந்தபோதும், சட்டமன்றத்தில் ஒருவர் கலைஞர் பெயரை குறிப்பிட்டு பேசியபோது அதை கண்டித்தார்; அப்போது, உங்களுக்கு நான் தலைவராக இருக்கலாம்.. எனக்கு தலைவர் கலைஞர்தான்” என்று சொல்லி பேசியவரிடம் வார்த்தையை வாபஸ் வாங்க சொன்னார் எம்ஜிஆர்; இது வரலாறு என்று பேசினார்.

தவெக தொழில்நுட்ப பிரிவு

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருந்தார் திமுகவில் இருந்தார் என்று கொளத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஸ்டாலின் அவர்கள் பெருமை பொங்க பேசினார். தி.மு.க.வால்தான் முதன்முதலில் எம்.எல்.ஏ. ஆனார். அதுதான் வரலாறு என்றெல்லாம் சொன்னவர், பிறகுதான் தனிக்கட்சி கண்டார் என்றும் தொடர்ந்து சொன்னார்.

ஆனால், தன் வாழ்நாள் எதிரியே தி.மு.க.தான் என்று கடைசிவரை வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர். தி.மு.க.வை ஒரு தீயசக்தி என்று அன்று சொன்னவர் எம்.ஜி.ஆர். தான் உயிரோடு இருக்கும்வரை தி.மு.க.வைக் கூப்பிலேயே உட்கார வைத்திருந்தார் எம்.ஜி.ஆர். என் நண்பர் எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் இருந்து வந்ததும் ஆட்சியைத் திருப்பித் தந்துவிடுகிறேன். அதுவரை என்னிடம் ஆட்சியைக் கொடுங்கள் என்று தி.மு.க.வைக் கெஞ்ச வைத்தார் எம்.ஜி.ஆர். இதுவும் வரலாறுதான் என்ற உண்மையைச் சொல்வாரா ஸ்டாலின் சார்?.

சட்டம் ஒழுங்கு டிஜிபி

சட்டம் ஒழுங்கு டிஜிபியை நியமிக்காமல் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கையே சந்தி சிரிக்க வைத்தவரும் இன்றைய நிலைக்கு ஆழமாய் விதை போட்டவரும் ஸ்டாலின் சார்தான். ஆனால், எல்லாவற்றையும் மறந்துவிட்டு, இன்று ஏதோ தன்னால் தமிழகம் பாழ்படவே இல்லை என்பதுபோலப் பேசி தன் நகைச்சுவை திறனை காட்டுகிறார்.

இந்த நிலையில், எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம். மூன்று வருடத்தில் வரலாம். ஆறு மாதத்தில்கூட தேர்தல் வரலாம் என்று பொறாமையும் விரக்தியும் பொங்கப் பேசுகிறார் ஸ்டாலின் சார். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருப்பதை மறந்துவிட்டு வாய்க்கு வந்ததைப் பேசுகிறார். மக்கள் தீர்ப்பை அவமதிப்பு செய்கிறார். ஆட்சி அதிகாரத்தை இழந்த விரக்தியில் விம்முகிறார். வெடிக்கிறார். துடிக்கிறார்.

ஸ்டாலின் சார் என்னதான் ஆலாய்ப் பறந்தாலும் அங்கலாய்த்தாலும் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டாலும் இனி வருகின்ற ஒவ்வொரு தேர்தலிலும் திமுக 100 சதவிகிதம் துடைத்தெறியப்படப் போவது உறுதி.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Previous articleபுனே இளம் தொழிலதிபர் கொலை வழக்கு; காதலனுடன் சேர்ந்து ‘பயிற்சி’ செய்த பெண் – பகீர் தகவல்கள்
tamiltamil



Read More

Previous Post

அடப்பாவிகளா.. இன்றும் வைபவ் சூர்யவன்ஷியை சேர்க்கலையா.. சின்னப்பையனை சோதிக்கும் கவுதம் கம்பீர்! | Vaibhav Sooryavanshi: Vaibhav Sooryavanshi is not included in the India playing XI against Ireland in the 2nd T20

Next Post

சவூதி அராம்கோ நிறுவனத்தின் ஹெலிக்கொப்டர் விபத்தில் 14 பேர் உயிரிழப்பு

Next Post
சவூதி அராம்கோ நிறுவனத்தின் ஹெலிக்கொப்டர் விபத்தில் 14 பேர் உயிரிழப்பு

சவூதி அராம்கோ நிறுவனத்தின் ஹெலிக்கொப்டர் விபத்தில் 14 பேர் உயிரிழப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin