இந்த ஆண்டின் எஞ்சியுள்ள மாதங்களுக்குள் அபிவிருத்தி திட்டங்கள் அனைத்தும் துரிதமாக நிறைவுறுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
மேலும், இதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து முழுமையான ஒத்துழைப்பை வழங்கிப் பணிகளை முன்கொண்டு செல்ல வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வைத்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
முழுமையான ஒத்துழைப்பு
இதன்போது கருத்துத் தெரிவித்த அவர்,

‘அனைவரும் தமது பெறுமதியான நேரத்தைச் செலவிட்டே
இவ்வாறான கூட்டங்களில் பங்கேற்கின்றனர்.
எனவே, இந்தக் கூட்டத்தை மிகவும்
வினைத்திறனாகவும் ஆரோக்கியமான முறையிலும் முன்கொண்டு செல்ல அனைவரும் முழுமையான
ஒத்துழைப்பை வழங்க வேண்டும்,’ எனக் கேட்டுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து தலைமையுரையாற்றிய ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும்
அமைச்சருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர், ‘இங்கு வருகை தந்துள்ள அனைவரும்
கற்றவர்கள். எனவே, அனைவரையும் பரஸ்பரம் கௌரவமாக நடத்த வேண்டும்,’ என
வலியுறுத்தினார்.
அத்துடன், வடக்கு மாகாண சபையின் கீழ் இயங்கும் வீதி
அபிவிருத்தித் திணைக்களமானது தனது வேலைத்திட்டங்களை மிகவும் வேகமாக
முன்னெடுத்து வருவதாகவும், மேலதிக வேலைகளைக் கூட அவர்கள் தாமாகவே கோரிப்
பெற்றுச் செய்வதாகவும் அவர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

