தஞ்சோங் காத்தோங்கில் நேற்று (ஜூலை 26) திடீர் பள்ளம் ஏற்பட்டது, இது தொடர்பான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜூலை 26 மாலை 5 மணியளவில், தஞ்சோங் காத்தோங் சாலை மற்றும் மவுண்ட்பேட்டன் சாலை சந்திப்பில் ஏற்பட்ட இந்த பள்ளத்தால், சாலையின் இரு வழித்தடங்களும் பாதித்தது.
பாதிக்கப்பட்ட காரின் பின்னால் வந்த காரில் இருந்த திரு. லிம் என்பவர், தனது டேஷ்கேமில் பதிவான சம்பவம் நடந்த நிகழ்விட காணொளிகளை பகிர்ந்து கொண்டார்.
நன்றாக சென்றுகொண்டிருந்த கார், சாலையில் திடீரென ஏற்பட்ட பெரும் பள்ளத்தால் குழிக்குள் விழுந்தது.
வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் பிறர் உதவிக்காக வேண்டி ஓடுவதையும் காண முடிந்தது.
பின்னால் வந்த வாகனங்களையும் தடுத்து அவர்கள் உதவியது அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது.
நேரடி காணொளி:
https://www.instagram.com/p/DMmpaZvO2za
திடீர் பள்ளம் ஏற்பட்ட சத்தம் கேட்டதாகவும், இதனால் அங்கு வேகமாக ஓடி வந்ததாகவும் சுப்பையா என்ற தமிழ்நாட்டு கட்டுமான ஊழியர் கூறினார்.
அப்போது அந்த குழியில் கார் ஒன்று விழுந்துக் கிடப்பதையும் அவர் கண்டார், அதுக்குள் இருந்த ஓட்டுநர் காரை விட்டு வெளியேறியதாகவும் அவர் சொன்னார்.
சுப்பையா மற்றும் சக ஊழியர்கள் ஓடிச்சென்று உதவி, அந்த ஓட்டுநரை பத்திரமாக காப்பாற்றினார். முழு விவரம் கீழே:
இந்நிலையில், மவுண்ட்பேட்டன் சாலைக்கும் கிழக்கு கடற்கரை பார்க்வேக்கும் இடையே உள்ள தஞ்சோங் கத்தோங் சாலை தெற்கு மூடப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்தது.
ஜூலை 27 நிலவரப்படி, சாலை சரிசெய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.