SINGAPORE: ஓட்டுநர் ஒருவருக்கு திடீரென ஏற்பட்ட பக்கவாதத்தால் அவர் அகால மரணமடைந்தார், இந்நிலையில் அவரின் குடும்பத்துக்கு உதவும் நோக்கில் சக ஓட்டுனர்கள் இணைந்து நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தனியார் வாடகை டாக்ஸி ஓட்டுநர்கள் ஒன்றாக இணைந்து இந்த நிதி திரட்டும் பணியை மேற்கொள்கின்றனர்.
பதின்ம வயது பிள்ளைகள்
உயிரிழந்த கிராப் ஓட்டுநருக்கு இரண்டு பதின்ம (டீனேஜ்) வயது பிள்ளைகள் உள்ளனர், தனியாக அவர் பிள்ளைகளை வளர்த்து வந்ததாக கூறப்பட்டுள்ளது.
இந்த திடீர் மரணத்தால் நிலைகுலைந்த அவரின் குடும்பத்துக்கு உதவும் நோக்கில் இந்த நிதி கொடுக்கப்படும் என சொல்லப்படுகிறது.
PHV ஓட்டுநர்களுக்கான பேஸ்புக் குழுவில் பகிரப்பட்ட இரங்கல் அறிவிப்பின்படி, 49 வயதான கவின் நியோ என்ற அந்த ஓட்டுநர் கடந்த வியாழக்கிழமை (மே 29) அன்று இறந்தார்.
அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு (செவ்வாய்க்கிழமை) அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.
16 மணி நேரம் வேலை
நியோ ஒரு கடின உழைப்பாளி என்றும், அவரது குழந்தைகளுக்காக மட்டுமே அவர் வாழ்ந்து வந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது, நியோ தினமும் 16 மணி நேரம் வரை வேலை செய்ததாகவும், உறங்கக்கூடாது என்பதற்காக வேண்டி பானங்களை அருந்துவார் என்றும் சொல்லப்படுகிறது.
இரவு முழுவதும் அயராது உழைப்பார், பின்னர் தனது மகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்பதற்காக வீட்டிற்கு விரைந்து சென்று தூங்குவார், இதேயே அவர் சுழற்சியாக தினமும் செய்வார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நல்ல ஆடை கூட கிடையாது
நியோ எப்போதும் விலை மலிவான உணவையே உண்வார், அவ்வாறு ஏன் செய்கிறாய் ? என்று சக ஓட்டுநர் கேட்ட கேள்விக்கு, “இது என் குழந்தைகளுக்காகவும் அவர்களின் எதிர்காலத்திற்காகவும்,” என்று நியோ பதில் சொன்னாராம்.
“தன்னால் முடிந்தவரை நியோ தனது பிள்ளைகளை பராமரிக்க வேண்டும் என்பதற்காக சிக்கனமாகச் செலவிடுவார்” என்றும் சக ஓட்டுநர் பகிர்ந்து கொண்டார்.
இன்னொரு ஓட்டுநர் குறிப்பிடும்போது. “அவர் அவருக்காக செலவழிக்க மாட்டார், நல்ல உணவு உண்ண மாட்டார், நல்ல ஆடை உடுத்தியது கிடையாது, மது குடிக்க மாட்டார், சூது விளையாட மாட்டார்; அனைத்தையுமே தன் பிள்ளைகளுக்காக அவர் அர்ப்பணம் செய்தார்” என்றார்.
இந்த நன்கொடையை பெறுவதற்கு முழு தகுதியானவர் அவர் என்றும், அவரது குழந்தைகள் வாலிப பருவம் அடையும் வரை அவர்களுக்காக உதவும் நோக்கில் நியோவின் குடும்பத்திற்கு நன்கொடைகளை அனுப்புமாறு நெட்டிசன்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் லாரி விபத்து.. 10 பேர் மருத்துவமனையில் அனுமதி

