• Login
Monday, July 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

திடீரென முடங்கிய பேஸ்புக்: டெஸ்க்டாப் பயனர்கள் கடும் அவதி.. மெட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வ விளக்கம்! – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
July 19, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
திடீரென முடங்கிய பேஸ்புக்: டெஸ்க்டாப் பயனர்கள் கடும் அவதி.. மெட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வ விளக்கம்! – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
திடீரென முடங்கிய பேஸ்புக்: டெஸ்க்டாப் பயனர்கள் கடும் அவதி.. மெட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வ விளக்கம்!

மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக் சேவை இன்று மதியம் திடீரென முடங்கியது. மொபைல் பயனர்களுக்குப் பாதிப்பு இல்லாத நிலையில், டெஸ்க்டாப் பயனர்கள் லாக் அவுட் சிக்கலால் அவதிக்குள்ளாகினர்.

மெட்டா (Meta) நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் உலகின் முன்னணி சமூக வலைதளமான பேஸ்புக் (Facebook) சேவை, இன்று (19, 2026) மதியம் திடீரென தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முடங்கியதால் உலகளவில் லட்சக்கணக்கான பயனர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

இலங்கை, இந்தியா உட்பட உலக நாடுகளைச் சேர்ந்த சுமார் 350 கோடி பேர் மெட்டாவின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் த்ரெட்ஸ் ஆகிய செயலிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், இன்று மதியம் டெஸ்க்டாப் (Desktop/System) வழியாகப் பேஸ்புக்கை அணுகிய பயனர்களுக்குச் சேவை முற்றிலும் முடங்கியது. கணக்குகள் தானாகவே லாக் அவுட் (Log out) ஆவது, புதிய பதிவுகளைப் பதிவிட முடியாமல் போவது மற்றும் கணினத் திரையில் ‘ஏரர்’ (Error) செய்தி தோன்றுவது போன்ற பல்வேறு சிக்கல்களைப் பயனர்கள் எதிர்கொண்டனர்.

இருப்பினும், இந்தத் தொழில்நுட்பக் கோளாறு மொபைல் செயலியைப் (Mobile App) பயன்படுத்தும் பயனர்களைப் பாதிக்கவில்லை என்றும், கணினி மற்றும் மடிக்கணினிகளில் டெஸ்க்டாப் பதிப்பைப் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே இந்தச் சிக்கல் நிலவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்டா நிறுவனம் விளக்கம்: உலகளவில் பல லட்சம் பயனர்கள் சமூக வலைதளங்களில் இது குறித்துப் புகார் தெரிவித்து வந்த நிலையில், பேஸ்புக் நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்துள்ளது. “பேஸ்புக்கின் முக்கியத் தகவல் மையங்களை (Data Centers) இணைப்பதில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்தச் சேவை முடக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்னும் சில மணி நேரங்களில் இந்தச் சிக்கல் முழுமையாகச் சரிசெய்யப்படும். பயனர்களுக்கு ஏற்பட்ட இந்தத் தற்காலிகத் தடங்கலுக்கு ஆழமாக வருந்துகிறோம்” என்று மெட்டா நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது.


George

WRITTEN BY

George

ஜே.ஏ.ஜோர்ஜ், நியூஸ்21 இணையதளத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 14 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி, இணையத்தளம் மற்றும் டிஜிட்ட…


→

Read More

Previous Post

மாநிலத் தேர்தல்களில் ஒற்றுமை அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சிகளைத் தாக்குவதற்கு எதிராக அமைச்சர்களுக்கு அன்வர் எச்சரிக்கை | Makkal Osai

Next Post

Leave | அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் நாளை விடுமுறை அளித்து கேரள அரசு உத்தரவு.. என்ன காரணம்?

Next Post
Leave | அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் நாளை விடுமுறை அளித்து கேரள அரசு உத்தரவு.. என்ன காரணம்?

Leave | அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் நாளை விடுமுறை அளித்து கேரள அரசு உத்தரவு.. என்ன காரணம்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin