SINGAPORE: சிங்கப்பூரில் சாலையில் சென்று கொண்டிருந்த லாரி திடீரென கால்வாயில் பாய்ந்த காணொளி நெட்டிசன்களிடையே பேசும் பொருளாக மாறியுள்ளது.
கடந்த மே 29 ஆம் தேதி அன்று டைரி பார்ம் சாலையில் இந்த சம்பவம் நடந்ததாக SG Road Vigilante பேஸ்புக் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் லாரி விபத்து.. 10 பேர் மருத்துவமனையில் அனுமதி
சாலையில் சென்றுகொண்டிருந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து சறுக்கி அருகில் உள்ள கால்வாயில் பாய்ந்ததை அந்த காணொளி மூலம் காண முடிகிறது.
SG Road Vigilante Youtube பக்கத்தில் பதிவேற்றப்பட்ட காணொளியில், இந்த சம்பவம் குறித்த பல கருத்துக்களை சிங்கப்பூரர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
அதில் ஒருவர், “இந்தியர்களுக்கு இலகுவாக ஓட்டுநர் உரிமம் கிடைப்பதாகவும், ஆனால் சிங்கப்பூரர்களுக்கு கிடைப்பதில்லை” என்றும் கருத்து தெரிவித்து இருந்தார்.

ஒருவர், “அவர் புதர்களுக்குள் முற்றிலும் சரியான சுற்றுலா இடம் ஒன்றை கண்டுபிடித்தார்” என்றும் நகைச்சுவையாக கமெண்ட் செய்தார்.
லாரி ஏன் கட்டுப்பாட்டை இழந்தது என்ற விவரம் வெளியாகவில்லை.
காணொளி
வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் லாரி விபத்து… இந்திய ஓட்டுநர் உயிரிழப்பு?