• Login
Sunday, October 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

திடீரென இந்திய நிறுவனத்தின் மருந்து ஆலையை தாக்கி அழித்த ரஷ்யா.. “சர்வ நாசம்..” என்ன நடந்தது? | Russia attacks India Pharama plant, Drone Attack Destroys Kusum Pharma Plant in Ukraine, One Killed

GenevaTimes by GenevaTimes
October 4, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
திடீரென இந்திய நிறுவனத்தின் மருந்து ஆலையை தாக்கி அழித்த ரஷ்யா.. “சர்வ நாசம்..” என்ன நடந்தது? | Russia attacks India Pharama plant, Drone Attack Destroys Kusum Pharma Plant in Ukraine, One Killed
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Vigneshkumar

Time
Published: Sunday, October 4, 2026, 14:41 [IST]

டெல்லி: உக்ரைன்- ரஷ்யா இடையேயான போர் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இரு நாடுகளுமே மாறி மாறி முக்கிய உள்கட்டமைப்புகளை தாக்கி அழித்து வருகிறது. இதற்கிடையே உக்ரைனில் செயல்பட்டு வரும் இந்தியாவை சேர்ந்த பிரபல மருந்து ஆலையை ரஷ்யா தாக்கி அழித்துள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் காயமடைந்துள்ளனர்.

ரஷ்யா உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடங்கி பலரும் முயன்றுவிட்டனர். ஆனால், அந்த போர் முடிவுக்கு வருவதாக தெரியவில்லை. இரு நாடுகளுமே மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், போர் தொடர்ந்து வருகிறது.

Russia attacks India Pharama plant Russia Ukraine

தாக்கி அழிப்பு

இதற்கிடையே உக்ரைனின் சுமி நகரில் செயல்பட்டு வரும் இந்தியாவின் குசும் (Kusum) குழுமத்துக்கு சொந்தமான மிக பெரிய மருந்து தயாரிப்பு ஆலையின் மீது ரஷ்ய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. இந்தத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர். மேலும், மருந்து உற்பத்தி ஆலையும் முழுமையாக அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ரஷ்ய ட்ரோன்கள் தாக்கியதில் மருந்து ஆலையின் முக்கிய கட்டமைப்பு பெருமளவில் சேதமடைந்துள்ளது. காயமடைந்தோரில் சிலரது நிலைமை மோசமாக இருப்பதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே தாக்குதலுக்கு பிறகு ஆலையை சுற்றியுள்ள பகுதியில் இருந்து மிக பெரிய அளவில் புகை எழுந்த காட்சிகளும் வெளியாகியுள்ளன.

இந்திய நிறுவனம்

இந்தியாவை சேர்ந்த குசும் குழுமம் கடந்த 1994ம் ஆண்டு உக்ரைனுக்கு இந்திய மருந்துகளை ஏற்றுமதி செய்யும் விநியோக நிறுவனமாக தனது பயணத்தை தொடங்கியது. தற்போது இந்த குழுமத்தை இந்தியரான ராஜீவ் குப்தா நிர்வகித்து வருகிறார். கடந்த 2002ம் ஆண்டு முதல் பிற நிறுவனங்களின் மருந்துகளை விநியோகிப்பதை நிறுத்திய குசும் குழுமம், தனது சொந்த மருந்து தயாரிப்புகளை சந்தைப்படுத்த தொடங்கியது. இதன் பின்னர் மருந்து உற்பத்தி துறையிலும் கால்பதித்தது.

கடந்த 2007ம் ஆண்டு இந்தியாவில் தனது முதல் உற்பத்தி ஆலையை குசும் குழுமம் தொடங்கியது. தொடர்ந்து 2009ம் ஆண்டு உக்ரைனின் சுமி நகரில் மருந்து தயாரிப்பு ஆலையை அமைத்தது. இதையடுத்து இந்தியாவிலும் மேலும் இரண்டு உற்பத்தி ஆலைகளை நிறுவியது. தற்போது குசும் குழுமம் பெரும்பாலும் ஜெனரிக் மருந்து வகைகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மருந்துகளை உற்பத்தி செய்து வருகிறது.

கடந்து வந்த பாதை

உக்ரைன், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 9-க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது மருந்துகளை விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் ஏற்கனவே பல மருந்து நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் வெற்றிகரமாக கால் பதித்துள்ள நிலையில், குசும் நிறுவனம் வளர்ந்து வரும் மிக முக்கியமான நிறுவனமாக இருக்கிறது. அதன் ஒரு ஆலை தாக்கி அழிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யா உக்ரைன் போர் பல ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையிலும், சுமியில் உள்ள குசும் குழுமத்தின் மருந்து ஆலை தொடர்ந்து செயல்பட்டு வந்தது. போர் காரணமாக நோய் பாதிப்புகளும் அதிகரிக்கும் ஆபத்து இருந்த நிலையில், மருந்துகள் அத்தியாவசியமானதாக இருந்தது. இதனால் மருந்து நிறுவனங்கள் மீது எந்தவொரு தாக்குதல்களும் நடத்தப்படவில்லை.

தாக்குதல்

இந்த சூழலில் தான் இப்போது மருந்து நிறுவனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த ட்ரோன் தாக்குதலால் ஆலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலால் குறைந்தபட்சம் ரூ.400 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம் மருந்து ஆலையை உக்ரைன் திட்டமிட்டு தாக்கி அழித்ததா அல்லது இது எதிர்பாராத விதமாக நடந்த தாக்குதலா என்பதில் தெளிவான தகவல்கள் இல்லை.

English summary

Russian drone attack on the Kusum Group’s pharmaceutical plant in Sumy(ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் இந்திய ஆலை சேதம்): Russia attacks India Pharama plant latest news in tamil.

Read More

Previous Post

இலங்கையின் எரிபொருள் இறக்குமதி செலவு : மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

Next Post

“பாகிஸ்தான் இனி நமக்கு போட்டியே இல்லை!” – ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற பின் பிசிசிஐ தலைவர் கடும் விமர்சனம்! | கிரிக்கெட் செய்திகள்

Next Post
“பாகிஸ்தான் இனி நமக்கு போட்டியே இல்லை!” – ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற பின் பிசிசிஐ தலைவர் கடும் விமர்சனம்! | கிரிக்கெட் செய்திகள்

"பாகிஸ்தான் இனி நமக்கு போட்டியே இல்லை!" – ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற பின் பிசிசிஐ தலைவர் கடும் விமர்சனம்! | கிரிக்கெட் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin