ஐபிஎல் 2025: பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வரும் நிலையில், தர்மசாலா மைதானத்தில் நடக்கும் பஞ்சாப் கிங்ஸ் – டெல்லி கேபிடல்ஸ் மேட்ச் ரத்து செய்யப்பட்டது. மைதானத்தின் விளக்குகள் அணைக்கப்பட்ட நிலையில், ரசிகர்கள் வெளியேற்றப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இருப்பினும், தர்மசாலாவில் உள்ள இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவிருந்த பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ், ஐபிஎல் 2025 போட்டி “தொழில்நுட்பக் கோளாறு” காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளர் தெரிவித்தார்.

