• Login
Friday, October 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தாராபுரத்தில் ருசிகரம்! சுயேச்சை வேட்பாளரிடம் Cooker கேட்டு அடம் பிடித்த பெண்! | Dharapuram by poll 2026: Woman asks Cooker from Independent candidate

GenevaTimes by GenevaTimes
October 2, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
தாராபுரத்தில் ருசிகரம்! சுயேச்சை வேட்பாளரிடம் Cooker கேட்டு அடம் பிடித்த பெண்! | Dharapuram by poll 2026: Woman asks Cooker from Independent candidate
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Tamilnadu

oi-Vishnupriya R

Time
Updated: Friday, October 2, 2026, 10:02 [IST]

தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ராஜரத்தினத்திடம் பெண் ஒருவர் குக்கர் கேட்டு அவரை தெறிக்கவிட்ட சம்பவம் நடந்துள்ளது.

தாராபுரம் தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த சத்தியபாமா, தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவில் இருந்து விலகி, தவெகவில் இணைந்தார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

by poll 2026 dharapuram 2026

அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தவெக வேட்பாளராக சத்தியபாமாவே களமிறக்கப்படுகிறார். இந்த தொகுதியில் அதிமுக, திமுக, தவெக, நாதக, மார்க்சிஸ்ட் – கம்யூனிஸ்ட் என 5 முனை போட்டி நிலவுகிறது.

இவர்களுடன் சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடுகிறார்கள். அவர்கள் தாராபுரத்தில் வீதி வீதியாக சென்று வாக்குச் சேகரித்து வருகிறார்கள். அந்த வகையில் தாராபுரத்தில் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் ராஜரத்தினம் என்பவர் குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

வாக்கு சேகரிப்பு

அவர் கிராமம் கிராமமாக குக்கருடன் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். அந்த வகையில் நேற்றைய தினம் தொப்பம்பட்டி, நஞ்சியம்பாளையம் ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று குக்கர் சின்னத்திற்கு வாக்கு கேட்டார்.

அப்போது ராஜரத்தினம் தனது ஆதரவாளர்களுடன் சென்று குக்கரை காட்டி அந்த சின்னத்திற்கு வாக்களிக்கும் படி கேட்டார். மேலும் தேர்தலில் வென்றால் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு குக்கர் வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.

குக்கர் கேட்ட பெண்

அப்போது அங்கிருந்த பெண் வாக்காளர் ஒருவர், “ஏன் அந்த குக்கரை இப்போதே கொடுங்கள்” என்றார். இதனால் ஸ்டர்னான ராஜரத்தினம், “வெற்றி பெற்றதும் புது குக்கர் ஆர்டர் செய்து தருகிறோம்” என சொன்னார். அப்படியும் விடாத அந்த பெண், “ஏன் இப்போது தரமாட்டீங்களா?” என கேட்டு வேட்பாளரை அதிர வைத்தார். இதனால் அங்கு கலகலப்பு நிலவியது.

நத்தம் விஸ்வநாதன்

கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்ட நத்தம் விஸ்வநாதன், வாக்கு சேகரிக்கச் சென்றார். அப்போது ஒரு கிராமத்தில் அவரை சூழ்ந்து கொண்ட பெண்கள், “ஜெயிச்ச பிறகு இந்த ஊர் பக்கம் ஆளையே பார்க்க முடியலை! இப்ப மட்டும் ஓட்டு கேட்டு வரீங்களா, நீங்கள் தந்த வாக்குறுதி என்னாச்சு?” என அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டார். இதனால் நத்தம் விஸ்வநாதன் பிரச்சார வாகனத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டார்.

கோவை உள்ளாட்சி தேர்தல்

அது போல் கோவை, பொள்ளாச்சி உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தின் போது வேட்பாளர் ஒருவர் தனது வாக்குறுதிகளை துண்டுபிரசுரத்தில் அச்சடித்து கொடுத்தார். அப்போது அங்கிருந்த பெரியவர், “தம்பி இந்த பேப்பரும் வேண்டாம், வாக்குறுதியும் வேண்டாம். எங்க ஊருக்கு தண்ணீர் கொண்டு வாங்க, அதுக்கு அப்பறம் ஓட்டு கேட்டு வாங்க” என சொல்லி அந்த வேட்பாளரை திணறடித்தார்.

குக்கர் சின்னம்

குக்கர் சின்னம் அமமுகவின் சின்னம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட தினகரனுக்கு சுயேச்சை சின்னமான குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டது. அதை வைத்து அவர் வெற்றியும் பெற்றார். இதையடுத்து தனது கட்சிக்கு அந்த சின்னத்தையே கொடுத்துவிடுமாறு தேர்தல் ஆணையத்தில் கேட்டு பெற்று கொண்டார்.

11 தொகுதிகள்

கடந்த சட்டசபை தேர்தலில் கூட என்டிஏ கூட்டணியில் போட்டியிட்ட அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஆனால் அவற்றில் ஒரு தொகுதியில் மட்டுமே அமமுக வென்றது. தற்போது அந்த ஒரு வேட்பாளரும் தவெகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து அதிருப்தி லிஸ்டில் சேர்ந்து விட்டார்.

English summary

A woman asking independent candidate Rajarathinam to issue a cooker.

Read More

Previous Post

உணவு, எரிபொருளின்றி தவிக்கும் ஈரானியக் கப்பல்கள்

Next Post

Gold Price Today | மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஷாக்.. இன்றைய நிலவரம் என்ன?

Next Post
Gold Price Today | மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஷாக்.. இன்றைய நிலவரம் என்ன?

Gold Price Today | மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஷாக்.. இன்றைய நிலவரம் என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin