உத்தரப் பிரதேச மாநிலம் காசிப்பூர் மாவட்டத்தில் நிலத்தகராறு காரணமாக ஒரு நபர் தனது பெற்றோர் மற்றும் சகோதரியைக் கோடாரியால் தாக்கி கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
தாக்குதலுக்குப் பிறகு குற்றவாளி சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும், அவரைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் வேட்டையை போலீசார் தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தில்லியா கிராமத்தில் இன்று இந்த கொடூரமான கொலைகள் நடந்துள்ளன. காவல்துறையின் கூற்றுப்படி, சந்தேக நபர் தனது தந்தை, தாய் மற்றும் சகோதரியைக் கோடாரியால் கொலை செய்துள்ளார். மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. குடும்பத்திற்குள் நீண்ட காலமாக நிலவி வந்த நிலத்தகராறுதான் இந்த கொலைகளுக்குக் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக இந்த மாதம், காஸ்கஞ்சில் நடந்த இதேபோன்ற ஒரு வழக்கில், ஒன்பது குழந்தைகளின் தாயான ரீனா மற்றும் அவரது காதலன் ஹனிஃப் ஆகியோர் அவரது கணவர் ரத்திராமை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.
ரீனா மற்றும் ஹனிஃப் இடையேயான காதல் உறவுக்கு ரத்திகாம் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் திட்டமிட்டு ரத்திராமை கொலை செய்து, அவரது உடலை ஒரு கிணற்றில் வீசியது விசாரணையில் தெரியவந்தது.