கோத்தாபாரு:
தாய்லாந்து-மலேசிய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கோலோக்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், மலேசியர் ஒருவர் படுகாயமடைந்தார்.
தாய்லாந்தின் கோலோக் நகரில் உள்ள சுஹாங் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6.40 மணியளவில் (தாய்லாந்து நேரம்) நடைபெற்றது.
முன்னதாக, 33 வயது மலேசிய நபரும் சந்தேக நபரும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த தகராறு தீவிரமடைந்ததையடுத்து, சந்தேக நபர் துப்பாக்கியால் சுட்டதாக போலீஸ் தெரிவித்துள்ளது.
சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்தி, 9மிமீ துப்பாக்கி ஒன்றை பறிமுதல் செய்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு தப்பியோடிய சந்தேக நபரை கைது செய்ய தாய்லாந்து போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
இந்த சம்பவம் எல்லைப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மீண்டும் கடுமைப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




