• Login
Saturday, September 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தாய்லாந்து மசாஜ் சென்டரில் கப்பலேறிய இந்தியா மானம்.. லாட்ஜில் காத்திருந்த இன்னொரு அதிர்ச்சி | Thailand Massage Center Controversy.. Another Shock Awaits Indians at the Lodge

GenevaTimes by GenevaTimes
September 26, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
தாய்லாந்து மசாஜ் சென்டரில் கப்பலேறிய இந்தியா மானம்.. லாட்ஜில் காத்திருந்த இன்னொரு அதிர்ச்சி | Thailand Massage Center Controversy.. Another Shock Awaits Indians at the Lodge
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Hema Vandhana

Time
Updated: Saturday, September 26, 2026, 14:28 [IST]

பேங்காக்: தாய்லாந்து லாட்ஜில் வைக்கப்பட்ட ஒரு நோட்டீஸ் போர்டை கண்டு, ஸ்பர்ஷ் சுனில் அதிர்ச்சியடைந்தார். அதற்கான காரணத்தை லாட்ஜ் உரிமையாளரிடம் கேட்டபோது, அவர் சொன்ன பதில் சுனிலை மேலும் அதிர வைத்தது.. இதையடுத்து, தாய்லாந்தில் சில இந்தியர்கள் நடந்து கொண்ட விதத்தை இணையத்தில் சுனில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவு தற்போது நெட்டிசன்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.

இந்தியாவை சேர்ந்த டிஜிட்டல் கிரியேட்டர் ஸ்பர்ஷ் சுனில்.. இவர் சமீபத்தில் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்தார்.. அப்போது அங்கிருந்த ஒரு லாட்ஜில் ஒட்டப்பட்டிருந்த நோட்டீஸ் போர்டைப் பார்த்து ஆடிப்போய்விட்டார்.

Thailand Indian Tourists Thailand Controversy

லாட்ஜ் ரூம்களுக்கு வெளியே ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல், இந்தியிலும் பெரியதாக ஒரு எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டிருந்தது. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வரும்போது, குறிப்பாக இந்தியில் மட்டும் ஏன் இந்த வாசகம் இருக்கிறது என்று சுனிலுக்கு சந்தேகம் எழுந்தது.. அதனால் அந்த நோட்டீஸ் போர்டு குறித்து லாட்ஜ் ஓனரிடமே நேரடியாக கேட்டுவிட்டார் சுனில்..

லாட்ஜ் ரூம் எச்சரிக்கை பலகை

அதற்கு அந்த ஓனர், “இந்தியாவில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகிறார்கள்.. அதில், சிலர் இங்குள்ள விதிமுறைகளை எத்தனை முறை சொன்னாலும் கடைப்பிடிப்பதில்லை.. அதனால்தான், அவர்களுக்காகவே ஆங்கிலம் தவிர, இந்தி மொழியிலும் எழுதி வைத்திருக்கிறேன்” என்றாராம்.

இந்த பதிலை கேட்டதுமே சுனிலுக்கு என்னவோ போலாகி விட்டது.. உடனடியாக இதை தன்னுடைய சோஷியல் மீடியாவிலும் வீடியோவாக ஷேர் செய்துள்ள சுனில், தாய்லாந்தில் இன்னொரு விஷயத்தையும் நினைவு கூர்ந்துள்ளார்.

தாய்லாந்து மசாஜ் சென்டர்

அதில், “நான் தாய்லாந்தில் சுற்றிப் பார்த்தபோது, மசாஜ் சென்டர்களுக்கு வெளியே சில இந்தியர்கள் நடந்து கொண்ட விதத்தை நேரில் பார்த்தேன்.. அங்கிருந்த பெண்களிடம் சிலர் முறையற்ற வகையில் நடந்து கொண்டனர்.. தாய்லாந்து நாட்டுப் பெண்களிடம் செல்ஃபி எடுப்பதற்காக சிலர் தொடர்ந்து தொந்தரவு செய்து கொண்டேயிருந்தனர்.

ஒரு நாட்டுக்கு நாம் சுற்றுலா செல்கிறோம் என்றால், அங்குள்ள இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு வருவது மட்டும் போதுமா? அங்குள்ள மக்களையும் அவர்களுடைய நடைமுறைகளையும் மதிக்க வேண்டாமா? நாம் நம்முடைய ஊரில் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டால், நம்முடைய ஒவ்வொரு நடவடிக்கையும் அங்குள்ளவர்களின் பார்வையில் இந்தியா என்ற அடையாளத்தோடு சேர்ந்துவிடும்.

வட இந்தியர், தென் இந்தியர் என்று நமக்குள் பல வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் நாட்டின் எல்லையைத் தாண்டிய பிறகு அந்த வேறுபாடுகள் எல்லாம் பின்னால் போய்விடும். அங்கே நாம் அனைவரும் இந்தியர்கள் தான். சிலர் செய்யும் தவறுகளால் ஒட்டுமொத்த இந்தியர்களின் பெயருக்கும் அவப்பெயர் வந்து சேர்வதுதான் எனக்கு மிகவும் வேதனையாக உள்ளது” என்று பதிவிட்டிருந்தார்.

தேவையில்லாத கெட்ட பெயர்

உடனே இதை பார்த்த நெட்டிசன்கள் திரண்டு வந்து தங்களது கருத்துக்களையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகிறார்கள்.. “பெண்களிடம் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்வது, அவர்களின் விருப்பமே இல்லாமல் போட்டோ எடுக்க முயற்சிப்பது போன்ற செயல்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.. சுற்றுலா என்ற பெயரில் இன்னொரு நாட்டுக்குச் செல்லும்போது, அங்குள்ள மக்களின் தனிப்பட்ட எல்லையையும் மரியாதையையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

வெளிநாடுகளில் சில இந்தியர்கள், வரிசையில் நிற்காமல் முந்தி செல்வது, கண்ட இடங்களில் குப்பைகளை வீசுவது, உள்ளூர் விதிமுறைகளை மதிக்காமல் சத்தமாக பேசுவது, இப்படியெல்லாம் இங்கே நடந்து கொள்வது போலவே அங்கேயும் நடந்து கொள்கிறார்கள்..

நெட்டிசன்கள் கோரிக்கை

ஒருசிலர் செய்யும் தவறுக்கு ஏன் எல்லா இந்தியர்களுக்கும் கெட்டப்பெயர் வர வேண்டும்? வெளிநாடுகளில் ஒழுக்கமாகவும் பொறுப்புடனும் நடந்து கொள்ளும் எத்தனையோ இந்தியர்களும் இருக்கிறார்கள்… ஆனால் ஒரு சிலரின் செயல்கள் தான் அவர்களுக்கும் சேர்த்து தேவையில்லாத சங்கடத்தை இவர்கள் ஏற்படுததி விடுகிறார்கள்.

அதனால் வெளிநாடு செல்லும் முன்பு, அடிப்படை பொது ஒழுக்கம் குறித்து முறையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.. பாஸ்போர்ட் பெறுவதற்கு முன்பே குடிமைப் பயிற்சி போன்ற அடிப்படை விஷயங்களை சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றும் சில நெட்டிசன்கள் கோரிக்கைகளாக விடுத்துள்ளனர்.

English summary

Thailand Massage Center Controversy.. Another Shock Awaits Indians at the Lodge

Read More

Previous Post

ஜி.எஸ்.பி. பிளஸ் குறித்து ஐரோப்பிய பாராளுமன்றக் குழு கலந்துரையாடல்

Next Post

வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்: யூபிஐ ,ஆன்லைன் பேமெண்ட்களுக்கும் சிக்கலா? மக்களே கவனம்..!! | Bank Strike 2026: Will UPI, Online Payments and ATM Services Work from September 28 to 30?

Next Post
வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்: யூபிஐ ,ஆன்லைன் பேமெண்ட்களுக்கும் சிக்கலா? மக்களே கவனம்..!! | Bank Strike 2026: Will UPI, Online Payments and ATM Services Work from September 28 to 30?

வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்: யூபிஐ ,ஆன்லைன் பேமெண்ட்களுக்கும் சிக்கலா? மக்களே கவனம்..!! | Bank Strike 2026: Will UPI, Online Payments and ATM Services Work from September 28 to 30?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin