• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

தாய்லாந்து- கம்போடியா போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிலைநிறுத்த டிரம்ப், அன்வார் மறுவுறுதி | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
November 16, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
தாய்லாந்து- கம்போடியா போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிலைநிறுத்த டிரம்ப், அன்வார் மறுவுறுதி | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:
அமெரிக்காவின் சமரச முயற்சியால் எட்டப்பட்ட சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாகவும் உடனடியாகவும் செயல்படுத்தத் தங்களின் உறுதியை தாய்லாந்து, கம்போடியா, மலேசியா மற்றும் அமெரிக்க தலைவர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த மாதம் கோலாலம்பூரில் நடைபெற்ற 47வது ஆசியான் உச்சிமாநாட்டில், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மற்றும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் முன்னிலையில் தாய்லாந்தும் கம்போடியாவும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. எனினும், இந்த வாரம் இரு நாடுகளின் எல்லைப் பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விரகுல், கம்போடியப் பிரதமர் ஹுன் மானெட், மலேசியப் பிரதமர் அன்வார், அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் அவசர தொலைபேசி கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

மலேசியப் பிரதமர் அன்வார், தமது சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில்,
“எந்தவொரு வர்த்தகப் பேச்சுவார்த்தையும் நிறுத்தப்படாது. எல்லைப் பகுதிகளில் புதிதாக வைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அவசரமாக அகற்றுவதில் அனைத்து தலைவர்களும் உடன்பட்டுள்ளனர். இந்த பிரச்சினையைத் தீர்க்க முனைவுடன் செயல்பட்ட அமெரிக்க அதிபரை நான் பாராட்டுகிறேன்,”
என்று குறிப்பிட்டார்.

தாய்லாந்து, தற்காலிகமாக சண்டை நிறுத்தத்தை நிறுத்துவதாக இந்த வாரம் அறிவித்தது. கம்போடியா புதிதாக வைத்த கண்ணிவெடிகளில் தனது படைவீரர்கள் காயமுற்றதாக பேங்காக் குற்றஞ்சாட்டியுள்ளது. தாய்லாந்து மன்னிப்புக் கோரியிருந்தாலும், அதை கம்போடியா நிராகரித்துள்ளது.

இதற்கிடையில் தாய்லாந்து, அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தை தடையின்றி தொடரும் என்று தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினை, வர்த்தக பேச்சுவார்த்தையை பாதிக்காது என்றும் பேங்காக் விளக்கியுள்ளது.

கடந்த அக்டோபரில் வாஷிங்டனும் பேங்காக்கும் இணைந்து அறிவித்த இருதரப்பு வர்த்தக கட்டமைப்பின் கீழ், தாய்லாந்தில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் 19 பொருட்களுக்கு வரி விதிக்கப்படும். சில பிற பொருட்களுக்கு வரியை முழுமையாக நீக்குவதும் பரிசீலனையில் உள்ளது.



Read More

Previous Post

மருத்துவர் உமர் நபியின் கூட்டாளி டெல்லியில் கைது: வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐ20 கார் வாங்கி கொடுத்தவர் | NIA arrests key aide of suicide bomber Umar Nabi who helped procure i20

Next Post

ரஷ்யா உடனான உக்ரைனின் அடுத்த நகர்வு! ஜெலென்ஸ்கி வெளியிட்ட அறிவிப்பு

Next Post
ரஷ்யா உடனான உக்ரைனின் அடுத்த நகர்வு! ஜெலென்ஸ்கி வெளியிட்ட அறிவிப்பு

ரஷ்யா உடனான உக்ரைனின் அடுத்த நகர்வு! ஜெலென்ஸ்கி வெளியிட்ட அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin