Last Updated:
இத்தாலி குளிர்கால ஒலிம்பிக்கில் Elana Meyers Taylor 41 வயதில் தங்கம், Kaillie Humphries வெண்கலம் வென்றனர்; தாய்மை தடையல்ல என்பதை இருவரும் நிரூபித்துள்ளனர்.
திறமை இருந்தால் போதும், தாய்மை எல்லாம் ஒரு தடையே இல்லை என குளிர்கால ஒலிம்பிக்கில் இரு வீராங்கனைகள் நிரூபித்துள்ளனர்.
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இத்தாலியில் நடைபெற்று வருகின்றன. மகளிருக்கான ‘மோனோபாப்’ பனிச்சறுக்கு போட்டியில், அமெரிக்காவின் எலானா மேயர்ஸ் டெய்லர், 41 வயதில் முதல்முறையாக தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
நான்கு ஒலிம்பிக் போட்டிகளில் ஏற்கனவே 5 பதக்கங்களை வென்றிருந்தாலும், தங்கம் என்பது அவருக்கு கனவாகவே இருந்தது. ஆனால் நடப்பு ஒலிம்பிக் தொடரில் அவர் வெறும் 0.04 விநாடி வித்தியாசத்தில் தங்கம் வென்றுள்ளார். ‘டவுன் சிண்ட்ரோம்’ மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ள இரண்டு குழந்தைகளுக்குத் தாயான எலானா, பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியிலும் இந்த சாதனைை நிகழ்த்தியுள்ளார்.
இதேபோட்டியில் மற்றொரு அமெரிக்க வீராங்கனையான கைலி ஹம்ப்ரிஸ் வெண்கலப் பதக்கம் வென்றார். 18 மாதங்களுக்கு முன்பு தாயானா கைலி, ஒரு பெண்ணால் தாயாகவும் இருக்க முடியும், அதே சமயம் உலகத்தரம் வாய்ந்த வீராங்கனையாகவும் பதக்க மேடையில் நிற்கவும் முடியும் என தெரிவித்துள்ளார். போட்டிக்குப் பிறகு தனது மகனுடன் கைலி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் மிகுந்த கவனம் பெற்றுள்ளன.


