எடப்பாடி பழனிசாமி மீது விமர்சனம்
தற்போதைய ஆதிமுக பொதுச் செயலாளர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த ஓ.பி.எஸ்., “அதிமுக வெற்றி பெறக்கூடிய வாய்ப்புகள் எந்த காலத்திலும் இருக்க கூடாது என்று தன்னுடைய நடவடிக்கையைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்” என்று குற்றம்சாட்டினார். மேலும், “ஒற்றைத் தலைமை வந்தால் அனைத்து தேர்தலிலும் நான் வெற்றி பெறுவேன் என்றுதான் எங்களிடம் பேசினார்கள். ஆனால் ஒரு தேர்தலையும் வெற்றி பெற முடியவில்லை” என்று கூறிய அவர், “அவராகவே பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகிக் கொள்வதுதான் அவருக்கு மரியாதையாக இருக்கும். இல்லையென்றால், அவர் அவமரியாதையைச் சந்திப்பார்” என்று எச்சரிக்கையும் விடுத்தார்.

