Last Updated:
மக்களவை உறுப்பினர் டாக்டர் சஞ்சய் ஜெய்ஸ்வால், தலைமுறையினரின் மனநல ஆரோக்கியம்: அதிக டிஜிட்டல் பயன்பாடு, பொருளாதார அழுத்தம், நிச்சயமற்ற தன்மை என்ற தலைப்பிலான பயிலரங்கில் பங்கேற்றார்.
தான்சானியாவின் அருஷாவில் நடைபெற்று வரும் 153-வது சர்வதேச நாடாளுமன்ற யூனியன் பொதுசபைக் கூட்டத்தின் மூன்றாம் நாள் அமர்வில் (அக்டோபர் 7) மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஷ் தலைமையிலான இந்திய நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழு பங்கேற்றது.
அனைவரையும் உள்ளடக்கிய அம்சம், நம்பிக்கை, வாய்ப்புகள் மூலம் சிறந்த நிர்வாகத்தை மேம்படுத்துதல், சமூகங்களை வலுப்படுத்துதல் என்ற தலைமைப்பில் நடைபெற்ற பொது விவாதத்தில் திரு ஹரிவன்ஷ் பங்கேற்றார். சிறந்த நிர்வாகத்திற்காக வெளிப்படைத் தன்மையை வலுப்படுத்தவும், பொறுப்புடைமையைப் பின்பற்றவும், பொதுமக்களின் நம்பிக்கையை வளர்க்கவும், நாடாளுமன்ற உறுப்பினர்களை மாநிலங்களை துணை தலைவர் வலியுறுத்தினார்.
மக்களவை உறுப்பினர் டாக்டர் சஞ்சய் ஜெய்ஸ்வால், தலைமுறையினரின் மனநல ஆரோக்கியம்: அதிக டிஜிட்டல் பயன்பாடு, பொருளாதார அழுத்தம், நிச்சயமற்ற தன்மை என்ற தலைப்பிலான பயிலரங்கில் பங்கேற்றார்.