
Last Updated:
14 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனது வீட்டில் இருந்தபோது கோடரியை எடுத்து தன்னைத்தானே தாக்கி கொண்டார். அப்போது அவரை அவரது தாத்தா பீதாம்பர் (வயது 85) மற்றும் பாட்டி (வயது 80) ஹீராவதி ஆகியோர் தடுப்பதற்கு முற்பட்டனர்
கோடாரியால் தனது சொந்த தாத்தா, பாட்டியை பேரன் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டம் ராஜ்கர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இங்குள்ள தலார் பகாதி என்ற கிராமத்தில் 14 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனது வீட்டில் இருந்தபோது கோடரியை எடுத்து தன்னைத்தானே தாக்கி கொண்டார்.
அப்போது அவரை அவரது தாத்தா பீதாம்பர் (வயது 85) மற்றும் பாட்டி (வயது 80) ஹீராவதி ஆகியோர் தடுப்பதற்கு முற்பட்டனர். அப்போது அவர்கள் மீது தாக்குதல் நடத்திய பேரன், கோடாரியால் இருவரையும் வெட்டிக்கொலை செய்தார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தன்னைத் தானே தாக்குதல் நடத்தி காயமடைந்த பேரனை மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் உயிரிழந்த தாத்தா பாட்டியை போலீசார் பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.
இதையும் படிங்க – நாட்டின் சர்க்கரை உற்பத்தியில் பெரும் சரிவு…! விரைவில் விலை அதிகரிக்குமா…?
போலீசார் நடத்தியுள்ள முதல் கட்ட விசாரணையில் தாத்தா, பாட்டியை கொன்ற பேரன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
January 05, 2025 8:38 PM IST

