அதிதி ஜெய்ப்பூரைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரின் மகள். 2017-இல் மாடலிங் துறையில் நுழைந்த இவர், ‘ஃபெமினா மிஸ் இந்தியா’ போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். 2018-இல் ‘மிஸ் திவா’, ‘மிஸ் சுப்ரானேஷனல் இந்தியா’ மற்றும் ‘மிஸ் ராஜஸ்தான்’ ஆகிய பட்டங்களையும் வென்றுள்ளார். அதிதி பிரபல தொழிலதிபர் மகள் என்றாலும், தனியாக சோஷியல் மீடியா இன்ஃப்ளுயன்சராகவும், ஆடை நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.


