Last Updated:
புதுச்சேரி யூனியன் பிரதேசம் 30 தொகுதிகளுக்கான தவெக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் அக்கட்சித் தலைவர் விஜய்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 30 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 9ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. புதுச்சேரியில், திமுக – காங்கிரஸ் கூட்டணி, என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணி, தவெக உள்ளிட்டவை களத்தில் உள்ளன.
வரும் 9ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற இருக்கும் புதுச்சேரியில் நாளையோடு (23ஆம் தேதி) வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது. இந்நிலையில், இன்று சென்னையில் உள்ள தேனாம்பேட்டை அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனை நிறைவடைந்த நிலையில், 30 தொகுதிகளுக்குமான வேட்பாளர்கள் பட்டியலை அவர் வெளியிட்டார். இதில், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நான்கு பேருக்கும், ஒரு முன்னாள் அமைச்சருக்கும், சுயேச்சை எம்.எல்.ஏ. ஆக வெற்றி பெற்ற பிரகாஷ் குமார் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 30 தொகுதிகள் கொண்ட புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இரண்டு தொகுதிகளுக்கு பெண்களை வேட்பாளர்களாக அறிவித்துள்ளார் தவெக தலைவர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.
Puducherry (Pondicherry)
Mar 22, 2026 10:09 PM IST
தவெக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கட்சித் தலைவர் விஜய்! புதுச்சேரியில் முன்னாள் அமைச்சருக்கு வாய்ப்பு

