Tamilnadu
oi-Rajkumar R
செங்கல்பட்டு: மத்திய அரசின் கைப்பாவையாக தன்னிச்சையாக செயல்பட்ட தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும், மதுராந்தகம் – தாராபுரத்தில் நடப்பது திணிக்கப்பட்ட தேர்தல் எனவும், தவெக வேட்பாளர்கள் தோற்கடிக்க பட வேண்டும் சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், மதுராந்தகம் அருகே மேலவளம்பேட்டை பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுகந்தியை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சண்முகம், இந்த தேர்தல் இயற்கையாக வந்த தேர்தல் அல்ல, மக்கள் மீது திணிக்கப்பட்ட தேர்தல், திமுகவும் அதிமுகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முயன்றார்கள். அது எங்களுக்கு பிடிக்கவில்லை என ராஜினாமா செய்தவர்கள் கதை சொல்கிறார்கள்
மதுராந்தகம் இடைத்தேர்தல்
அதில் உடன்பாடு இல்லை என்றால் அதிமுகவில் இருந்து வெளியேறி சுயேட்சையாக நின்றிருக்க வேண்டும். ஏன் தவெகவில் இணைந்தீர்கள், ஏதோ ஆதாயத்திற்காக தான் சேர்ந்தார்கள். என்ன பேரம் நடந்தது? ஏன் கட்சி மாறி வந்தார்கள், ஆதாயம் இல்லாமல் அவர்கள் போய் இருக்க மாட்டார்கள். எதற்காக ராஜினாமா செய்தார்?
எதற்காக அதே பதவிக்கு போட்டியிடுகிறார்? என இப்பகுதி மக்கள் கேட்க வேண்டும்.
தவெக
இது மக்களை கேலிக்குள்ளாகிற விஷயம், 20-நாட்களில் ராஜினாமா செய்துள்ளார்கள். மீண்டும் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம், மீறி வெற்றி பெற்றால் அரசியல் ஆதாயம் கருதி மீண்டும் வேறு கட்சிக்கு செல்வார்கள். தவெக அதிக இடங்களில் வெற்றி பெற்றதால் அவர்களுக்கு ஆதரவு அளித்தோம். எங்களுடைய ஆதரவுடன் தவெக ஆட்சி அமைந்துள்ளது. இன்னமும் எங்களுடைய ஆதரவு தொடர்கிறது.
திணிக்கப்பட்ட தேர்தல்
வேறொரு கட்சியில் இருந்து வந்த நபர்களை அவர்கள் சேர்ப்பது மட்டுமல்லாமல் மீண்டும் அவர்களை போட்டியிடுவதற்காக அனுமதித்து இருக்கிறார்கள் எப்படி அந்த நபர்களுக்கு ஓட்டு கேட்க முடியும். அதற்கு எந்த அடிப்படையில அவர்கள் வாக்கு கேட்கிறார்கள். ஆகவே நாங்கள் அந்த வேட்பாளரை ஆதரிக்க முடியாது. அதே நேரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியைப் போல தேர்தலை புறக்கணிப்பது என்கிற முடிவு பொருத்தமான முடிவு அல்ல என்று இடதுசாரி நாங்கள் முடிவு செய்தோம்.
தேர்தல் ஆணையம்
ஆகவே தனித்து போட்டியிடுவது என்கிற முடிவு எடுத்தோம். தவெகவிற்கு ஆதரவு அளித்ல நாங்கள் திமுகவுடன் சேர்ந்து போட்டியிட முடியாது. இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இரண்டு தேர்தல் ஆணையர்களின் ஆலோசனை கேட்காமல் தன்னிச்சையாக செயல்பட்டார் என்று மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்கள் தெரிவித்துள்ளனர் மத்திய அரசுக்கு கை பாவையாகா செயல்பட்டு உள்ளார். அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.

