• Login
Monday, September 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தவெக ஆட்சியில்.. இந்துத்துவா ஆதரவு நிகழ்ச்சி? தனுஷ்கோடியில் நடந்த சம்பவம்! எழும் குற்றச்சாட்டுகள் | Ram Yatra Nrityanjali Held in Dhanushkodi for First Time: Criticism Against Vijay Govt

GenevaTimes by GenevaTimes
September 28, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
தவெக ஆட்சியில்.. இந்துத்துவா ஆதரவு நிகழ்ச்சி? தனுஷ்கோடியில் நடந்த சம்பவம்! எழும் குற்றச்சாட்டுகள் | Ram Yatra Nrityanjali Held in Dhanushkodi for First Time: Criticism Against Vijay Govt
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Tamilnadu

oi-Halley Karthik

Time
Published: Monday, September 28, 2026, 16:24 [IST]

ராமேஸ்வரம்: உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, நேற்று ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ‘ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி’ நிகழ்ச்சி நடத்தப்பட்டிருக்கிறது. இதற்கு முன்னர் பல இடங்களில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டிருந்தாலும், ஒருபோதும் ராமர் பெயரில் நாட்டியாஞ்சலி நடத்தப்படவில்லை என்றும், தவெக ஆட்சியில் முதல்முறையாக இப்படியான இந்துத்துவா ஆதரவு நிகழ்ச்சி நடக்கிறது என்றும் பலரும் விமர்சித்திருக்கின்றனர்.

ராமநாதபுரம் மாவட்ட சுற்றுலாத்துறை மற்றும் ‘அபிநயா நாட்டியாஞ்சலி அறக்கட்டளை’ ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தியிருக்கின்றன. தனுஷ்கோடியின் ஆன்மீக மற்றும் புவியியல் முக்கியத்துவத்தை உலகத்திற்கு தெரியப்படுத்தவும், ஆன்மீக சுற்றுலாவை மேம்படுத்தவும் இந்த தளம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

Ram Yatra

இந்த நாட்டியாஞ்சலியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த 500க்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் மற்றும் சிறுமியர், சிறுமிகள் பங்கேற்றிருக்கின்றனர். பங்கேற்ற குழந்தைகள் மற்றும் பெண்கள் அனைவரும் ராமர், சீதை, லட்சுமணர் மற்றும் அனுமன் போன்ற ராமாயணக் கதாபாத்திரங்களின் வேடங்களை அணிந்து பராம்பரிய உடைகளுடன் காட்சியளித்தனர். நிகழ்ச்சியில் ராமரின் பெருமைகளை போற்றும் பாடல்களுக்கு கலைஞர்கள் அனைவுரும் ஒரே நேரத்தில் பரதநாட்டியம் ஆடி அஞ்சலி செலுத்தினர்.

சின்ன மோடியின் சீரிய ஆட்சியில்…
இதுவரை இல்லாத “ராம் யாத்ரா”… இப்போது தனுஷ்கோடியில்!

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, தனுஷ்கோடியில் முதன்முறையாக “ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி”நடத்தப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் மாவட்ட சுற்றுலாத்துறையும் தனியார் அறக்கட்டளையும் இணைந்து இந்த… pic.twitter.com/Kn4dD4MZJ9

— Iyan Karthikeyan (@Iyankarthikeyan) September 28, 2026

பொதுவாக தமிழகத்தில் சிதம்பரம், மகாபலிபுரம் மற்றும் தஞ்சாவூர் போன்ற பாடல் பெற்ற சிவதலங்களில் நாட்டியாஞ்சலி என்பது சிவபெருமானை மையமாக வைத்துதான் பெருமளவில் நடத்தப்படும். ஆனால், ராமயண இதிகாச பின்னணி கொண்ட தனுஷ்கோடியில் அரசு சுற்றுலாத்துறையே நேரடியாக இணைந்து வைணவ மரபான ராம் யாத்ரா என்ற பெயரில் நாட்டியாஞ்சலியை நடத்துவது இதுவே முதல்முறையாகும். அந்த வகையில் இந்த நிகழ்ச்சி பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

உலக சுற்றுலா தினத்தில்தான் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டிருக்கிறது. இந்த நாளில் தமிழ்நாட்டின் சுற்றுலா, வரலாறு, பன்முக பண்பாட்டை முன்னிறுத்த வேண்டிய அரசு துறை, இப்படி குறிப்பிட்ட ஒரு மதத்தின் புரானக்கதையை மையப்படுத்தி நிகழ்ச்சியை நடத்துவது என்பது ஏற்புடையதா? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். மட்டுமல்லாது இந்த நிகழ்ச்சியில் சுற்றுலா பயணிகளுக்கும் அனுமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

English summary

Ram Yatra: On the occasion of the World Tourism Day, the ‘Ram Yatra Nathianjali’ program was held for the first time at Rameswaram Dhanushkodi in Ramanathapuram district yesterday. Many people have criticized that although Natyanjali programs have been held in many places before this, Natyanjali has never been held in the name of Ram and this is the first time such a pro-Hindutva program is being held in the Thaveka regime.



Read More

Previous Post

சச்சினின் மைல்கல்லை எட்டிய விராட் கோலி

Next Post

சச்சினின் 100 சதங்கள் சாதனை… முறியடிக்க விராட் கோலிக்கு இருக்கும் வாய்ப்புகள் என்ன? | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post
சச்சினின் 100 சதங்கள் சாதனை… முறியடிக்க விராட் கோலிக்கு இருக்கும் வாய்ப்புகள் என்ன? | Sports News (விளையாட்டு செய்திகள்)

சச்சினின் 100 சதங்கள் சாதனை… முறியடிக்க விராட் கோலிக்கு இருக்கும் வாய்ப்புகள் என்ன? | Sports News (விளையாட்டு செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin