Last Updated:
தவெகவிடம் இருந்து விசிகவிற்கும் கடிதம் வந்துள்ளது; அது தொடர்பாக உரிய விளக்கத்தை எங்கள் தலைவர் அறிவிப்பார் என விசிக எம்.பி. ரவிக்குமார் பேட்டிளித்துள்ளார்.
மதசார்பற்ற கட்சிகளின் ஆதரவோடு தவெக ஆட்சி அமைக்கும் என விசிக எம்.பி ரவிக்குமார் தெரிவித்தார்.
புதுச்சேரியில் விசிக எம்.பி ரவிக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- பாஜகவின் அழுத்தத்திற்கு முதலமைச்சர் ரங்கசாமி பணிந்து பாஜகவின் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டார். இந்தியை திணிக்கும் சதிக்கு புதுச்சேரி அரசு உடந்தையாக இருக்கக் கூடாது. அரசாணை புதுச்சேரி அரசு திரும்பப் பெற வேண்டும் என்று விசிக எம்பி ரவிக்குமார் தெரிவித்தார்.
#JUSTIN தவெகவிடம் இருந்து விசிகவிற்கும் கடிதம் வந்துள்ளது; அது தொடர்பாக உரிய விளக்கத்தை எங்கள் தலைவர் அறிவிப்பார் – விசிக எம்.பி. ரவிக்குமார் பேட்டி#Ravikumar #VCK #TVK #Vijay #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/0bWGkDmTkx
— News18 Tamil Nadu (@News18TamilNadu) May 6, 2026
விஜய் தலைமையிலான தவெக காங்கிரஸ், விசிக, இடது சாரிகளின் ஆதரவை கேட்டு கடிதம் அனுப்பி உள்ளது. ஆதரவு கேட்ட கடிதம் கட்சித் தலைவருக்கு வந்துள்ளது. அவர் தனது அறிவிப்பை சென்னையில் இன்று வெளியிடுவார்.”என்று தெரிவித்தார்.
அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்தித்தாக வெளியான தகவல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த விசிக எம்பி ரவிக்குமார், “அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்கவில்லை. அது தவறான தகவல். இதுவரை தவெக மதசார்பற்ற கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது. அதனால்தான் காங்கிரஸ் விசிக இடதுசாரிகள் ஆதரவை தவெக கேட்டுள்ளதாக தெரிவித்தார்.


