Last Updated:
வரி நோட்டீஸ்கள் மற்றும் அறிவிப்புகளில் உள்ள தவறுகளை எளிமையாக சரி செய்வதற்கான வழிகளை வருமான வரித்துறை உருவாக்கி உள்ளது.
தவறான வரி நோட்டீஸ் டிமாண்டுகளைப் பெறுபவர்கள், அதனை எளிமையான முறையில் சரி செய்வதற்கு வருமானவரித்துறை ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அதனை எப்படி பயன்படுத்துவது என்பதைப் பற்றி இந்தப் பதிவில் விளக்கமாக பார்க்கலாம். வரி நோட்டீஸ்கள் மற்றும் அறிவிப்புகளில் உள்ள தவறுகளை எளிமையாக சரி செய்வதற்கான வழிகளை வருமான வரித்துறை உருவாக்கி உள்ளது.
வருமானவரித் துறையினரிடம் இருந்து தவறான டேக்ஸ் டிமாண்ட் நோட்டீஸ் அல்லது உங்களுடைய ITR ப்ராசஸிங் செய்யும்போது, ஏதேனும் பிழை ஏற்படும் பட்சத்தில் வரிவிதிப்பு ஆண்டு 2023-2024 வரை சரி பார்த்து கோரிக்கையை ஆன்லைனில் நீங்கள் தாக்கல் செய்யலாம். இந்த அம்சம் ஜனவரி 2025இல் அறிமுகப்படுத்தப்பட்டது. வரி செலுத்துபவர்கள் இந்த அம்சத்தை பயன்படுத்தி இன்கம் டேக்ஸ் ரிட்டன் போர்டல் மூலமாக தவறுகளை சரி செய்யலாம்.
சரிபார்ப்பு கோரிக்கையை உங்களால் எப்போது பயன்படுத்த இயலும்? உங்களுடைய ரிட்டனை பிராசஸ் செய்யும்போது, சென்ட்ரலைஸ்ட் பிராசசிங் சென்டர் (CPC) ஒரு தவறை இழைத்திருக்கும் பட்சத்தில், இந்த ரெக்டிஃபிகேஷன் ஆப்ஷன் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் கிளைம் செய்த டிடக்சன் தொகை கருத்தில் கொள்ளப்படாமல் இருத்தல், TDS, TCS அல்லது செல்ஃப் அசெஸ்மென்ட் டேக்ஸ் போன்றவை வழங்கப்படாமல் இருத்தல் மற்றும் வருமானம் இரண்டு முறை சேர்க்கப்பட்டிருத்தல் போன்றவை சில பொதுவான பிழைகள் ஆகும்.
எனினும், இந்த பிழைகளில் எவற்றிற்கேனும் சட்டரீதியான தலையீடு தேவைப்பட்டால் இந்த சரிபார்ப்பு ஆப்ஷனை உங்களால் பயன்படுத்த இயலாது. சரிபார்ப்பு கோரிக்கையை யாரால் செயல்முறைப்படுத்த முடியும்? உங்களுடைய சரிபார்ப்பு கோரிக்கையை சென்ட்ரலைஸ்ட் ப்ராசசிங் சென்டர் கையாளுவார்கள். ஒருவேளை CPC உங்களுடைய சரிபார்ப்பு கோரிக்கையை சரி செய்யாவிட்டால் இன்கம் டேக்ஸ் போர்டல் மூலமாக உங்களுடைய கோரிக்கையை மதிப்பீட்டு அதிகாரிக்கு (Assessment Officer – AO) நீங்கள் டிரான்ஸ்ஃபர் செய்யலாம். பரிசோதனைக்கு தேர்வு செய்யப்பட்டு இருந்தாலும் அல்லது வரி ஆணை முறையீட்டுக்கோ அல்லது மறு பரிசீலனைக்கோ அனுப்பப்பட்டிருந்தாலும் உங்களுடைய சரிபார்ப்பு உரிமைகளை மதிப்பீட்டு அதிகாரிக்கு டிரான்ஸ்ஃபர் செய்ய முடியாது.
இதையும் படிக்க: Personal loan | பர்சனல் லோன் வாங்குவதில் ஒருவருடைய வேலை எத்தனை முக்கியப் பங்கு வகிக்கிறது தெரியுமா…?
அதே சமயத்தில் உங்களுடைய சரிபார்ப்பு கோரிக்கையை மதிப்பீட்டு அதிகாரிக்கு தாக்கல் செய்ய இன்கம் டேக்ஸ் இ-ஃபைலிங் போர்ட்டலுக்கு சென்று உங்களுடைய விவரங்களை லாகின் செய்ய வேண்டும். அதில் ‘சர்வீசஸ்’ (Services) என்ற டேபை கிளிக் செய்யுங்கள். பிறகு, ‘ரெக்டிஃபிகேஷன்’ (Rectification) என்பதை தேர்வு செய்து, ‘ரெக்வஸ்ட் டு ஏஓ சீகிங் ரெக்டிஃபிகேஷன்’ (Request to AO seeking rectification) என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள். அதன் பிறகு ‘நியூ ரெக்வஸ்ட்’ (New Request) என்பதை கிளிக் செய்து தேவையான விவரங்களை சமர்ப்பிக்கவும்.
April 03, 2025 5:03 PM IST


