கடந்த 2-ம் தேதி, இந்தியா – அமெரிக்கா ஒப்பந்தம் அறிவிப்பை வெளியிட்டார்கள் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
இந்த ஒப்பந்தம் மார்ச் மாதம் கையெழுத்திடப்பட்டு, வரும் ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டது.
தற்போது இந்திய பொருள்களுக்கு அமெரிக்காவில் 50 சதவிகிதம் வரி விதிக்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் அமலாகும் போது, அது 18 சதவிகிதம் ஆக குறையும்.
ஆக, இந்த ஒப்பந்தம் இந்தியாவிற்கு மிகப் பெரிய ஹேப்பி நியூஸாக இருந்தது.

ஆனால், இந்த ஹேப்பி நியூஸ் தற்போது சுணங்கி உள்ளது.
ஆம்… ஒப்பந்தம் குறித்த அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை நடத்த இந்திய அதிகாரிகள் நாளை அமெரிக்கா செல்ல இருந்தனர்.
இந்தச் சந்திப்பு தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

