வெளிநாட்டு ஊழியரின் தலை நசுங்கி இறந்த கோர விபத்து தொடர்பில் நடந்த வழக்கில் மேற்பார்வையாளர் மீது தவறில்லை என விடுதலை வழங்கப்பட்டுள்ளது.
திரு. வை சோங் வெங் என்ற மேற்பார்வையாளர் மீது குற்றம் பதிவுசெய்திருக்க கூடாது என்பதை மனிதவள அமைச்சகத்தின் (MOM) விசாரணை அதிகாரி ஒப்புக்கொண்டார்.
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து ஆதாரங்களையும் ஆய்வு செய்யப்பட்டதை அடுத்து, திரு. வை மீது தவறில்லை என்றும் அவர் முழு நிரபராதி என்றும் கூறப்பட்டது.
2022 பிப்ரவரி மாதம், சீனாவைச் சேர்ந்த 34 வயதான சன் ஜைடாவோ என்ற வெளிநாட்டு ஊழியர், அட்டை பதப்படுத்தும் இயந்திரத்தில் கழிவுகளை அகற்றியபோது தலை நசுங்கி இறந்தார்.
இதில் மேற்பார்வையாளர் திரு. வை மீது குற்றம் சாட்டப்பட்டது.
அவரின் மரணம் வேலை தொடர்பான ஓர் தற்செயல் நிகழ்வு என்று மரண விசாரணை அதிகாரியின் விசாரணையில் தீர்ப்பளிக்கப்பட்டது.
இயந்திரம் இயங்கும் நேரத்தில் அதனுள் தலை அல்லது உடல் உறுப்புகளை உள்ளே விடுவது ஆபத்தான செயல். இயந்திரத்துக்கு, நடக்கும் நிகழ்வுகளை காண உதவும் கண்ணாடி திறந்த நிலையில் இருந்ததால் அதனுள் வெளிநாட்டு ஊழியர் தலையை விட்டதாக சந்தேகிக்கப்பட்டது.
மேற்பார்வையாளர் திரு. வை ஓர் ஊழியராக பொதுவான சில பொறுப்புகள் மட்டுமே அவருக்கு இருந்தது என்றும், எந்தவொரு பாதுகாப்பு நடவடிக்கைகளையும் செயல்படுத்துவது அவரது கடமை அல்ல என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதனால் திரு. வை நிரபராதி என தீர்ப்பு வழங்கப்பட்டது.
திரு. வை குற்றவாளி என நிரூபிக்கப்பட்டிருந்தால், அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது S$10,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட்டிருக்கலாம்.
PHOTO: Workplace Safety and Health Council