பட மூலாதாரம்,
15 பேர் வரை கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது
கொலைசெய்து அதை காட்சிப்படுத்த விரும்பிய ஒரு குழுவைச் சேர்ந்த உறுப்பினர்களை ஆஸ்திரேலிய காவல்துறையினர் கைது செய்திருப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பாட் தெரிவித்திருக்கிறார்.
இவர்கள் இஸ்லாமிய தீவிரவாதக்குழுக்களுக்காக பொதுமக்களின் தலையை வெட்டிக்கொல்ல முயன்றவர்கள் என்று கூறப்படுகிறது.
இவர்கள் தொடர்பாக அரசுக்கு கிடைத்த முன்னெச்சரிக்கை புலனாய்வுத்தகவல்களின் அடிப்படையில் இவர்களைக் கைது செய்யும்படி உத்தரவிட்டதாக அப்பாட் தெரிவித்திருக்கிறார்.
இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளுடன் சேர்ந்து ஆஸ்திரேலிய குடிமக்களும் சண்டையிடுவதாக வெளியான கவலைகளுக்கு மத்தியில் ஆஸ்திரேலியாவுக்கு தீவிரவாதிகளால் ஏற்படக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தலின் அளவை மத்திய தரம் என்கிற நிலையில் இருந்து அதிகபட்ச ஆபத்து நிலைக்கு உயர்த்துவதாக ஆஸ்திரேலிய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது.
அதன் தொடர்ச்சியாக ஆஸ்திரேலியாவில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளிலேயே மிகப்பெரிய நடவடிக்கையாக சிட்னியிலும் பிரிஸ்பேனிலும் நடந்த தேடுதல் நடவடிக்கைகளில் 800க்கும் அதிகமான அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.