Last Updated:
முதலமைச்சராக பொறுப்பேற்ற சுவேந்து அதிகாரி சுப்ரதா குப்தாவை தனது ஆலோசகராக நியமித்தார். இந்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் சட்டமன்ற தேர்தலின் போது தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த மனோஜ் அகர்வால் மாநில அரசின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க முதல்வா் சுவேந்து அதிகாரியின் ஆலோசகராக, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சுப்ரதா குப்தா நியமிக்கப்பட்டது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த மனோஜ் அகர்வால் தலைமைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க பேரவைத் தோ்தலுக்கு முன்பாக எஸ்ஐஆா் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, சுமாா் 90 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் பெயா்கள் நீக்கப்பட்டன. இந்த பணிகளை தேர்தல் ஆணையத்தின் சிறப்புப் பட்டியல் கண்காணிப்பாளராக பணியாற்றிய சுப்ரதா குப்தா மேற்கொண்டார். இவர் பாஜகவின் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்தவே களம் இறக்கப்பட்டதாக மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது.
இதையடுத்து தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்ற சுவேந்து அதிகாரி சுப்ரதா குப்தாவை தனது ஆலோசகராக நியமித்தார். இந்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் சட்டமன்ற தேர்தலின்போது தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த மனோஜ் அகர்வால் மாநில அரசின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனை கண்டித்துள்ள திரிணமுல் காங்கிரஸ் கட்சி, பாஜக விரும்பியபடி தேர்தலை நடத்தியதற்காக தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் அகர்வாலை மாநில அரசின் தலைமைச் செயலாளராக ஆக்கியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது.


