Last Updated:
ஞானேஷ் குமாரை பதவி நீக்க 73 மாநிலங்களவை எம்.பி.க்கள் மீண்டும் நோட்டீஸ், 9 குற்றச்சாட்டுகள் உள்ளன என காங்கிரஸ் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் பதிவில் குற்றம் சாட்டினார்
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்க கோரி 73 மாநிலங்களவை உறுப்பினர்கள் மீண்டும் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் பதவியேற்றார். இவர் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.
குறிப்பாக, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். மூலம் உண்மையான வாக்காளர்கள் நீக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, ஞானேஷ் குமாரை பதவி நீக்க கோரி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 19 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 300 எம்.பி.க்கள் நோட்டீஸ் வழங்கியிருந்தனர்.
இந்த நோட்டீஸ்களை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும், மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனும் நிராகரித்தனர்.
இந்த சூழலில், ஞானேஷ் குமாரை பதவி நீக்க கோரி 73 மாநிலங்களவை உறுப்பினர்கள் மீண்டும் நோட்டீஸ் அளித்துள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக 9 குற்றச்சாட்டுகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவற்றை மறுக்கவோ அல்லது மறைக்கவோ முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Delhi,Delhi,Delhi


