தலைமன்னார் கிராமத்தை அண்மித்த கடல் பகுதியில், இலங்கை கடல் எல்லையில்
இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் இந்திய விசைப்படகுகள் அத்துமீறி மீன்
பிடிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
உள்ளூர் கடற்றொழலாளர்கள் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று (06-08-2026) சனிக்கிழமை இடம் பெற்றுள்ளது.
உடனடி நடவடிக்கை
இதனால் இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு சுமார் ரூபாய் 6 இலட்சம் பெறுமதியான வலைகள்
சேதப்படுத்தப்பட்டு அல்லது திருடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

விவகாரம் தொடர்பாக தலைமன்னார் கடற்படையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை
என்றும் கடற்றொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்திய விசைப்படகுகளின் அத்துமீறலைத் தடுக்கவும், இலங்கை கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என
கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21 Evening

