• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

தலிபான்கள் பங்கேற்கும் கூட்டத்தில் பெண்களின் உரிமைகள் குறித்து கேள்வி எழுப்பப்படும்: ஐ.நா. துணை பொதுச் செயலர் தகவல் | Women rights will be raised at UN meeting being attended by Taliban

GenevaTimes by GenevaTimes
June 28, 2024
in உலகம்
Reading Time: 5 mins read
0
தலிபான்கள் பங்கேற்கும் கூட்டத்தில் பெண்களின் உரிமைகள் குறித்து கேள்வி எழுப்பப்படும்: ஐ.நா. துணை பொதுச் செயலர் தகவல் | Women rights will be raised at UN meeting being attended by Taliban
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நியூயார்க்: ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்கும் ஆப்கானிஸ்தானின் தலிபான் ஆட்சியாளர்களிடம் பெண்களின் உரிமைகள் குறித்து கேள்வி எழுப்பப்படும் என்று ஐ.நா. துணை பொதுச் செயலர் ரோஸ்மேரி டிகார்லோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: ஆப்கானிஸ்தானின் தலிபான் ஆட்சியாளர்கள் மற்றும் 25 நாடுகளின் தூதர்கள் பங்கேற்கும் முதல்கூட்டம் எனது தலைமையில் நடைபெறவுள்ளது. அடிப்படை உரிமை சம்பந்தப்பட்ட விவகாரங்களில் ஆப்கன் பெண்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் அளிக்காதது குறித்து சர்வதேச அளவில் கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு,ஞாயிற்றுக்கிழமை தொடங்கி இரண்டு நாள் நடைபெறவுள்ள தலிபான் மற்றும் பிறநாடுகளின் தூதர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் பெண் உரிமை தொடர்பான கேள்விகள் ஒவ்வொரு அமர்வின்போதும் ஆப்கானிஸ்தான் ஆட்சியாளர்களிடம் எழுப்பப்படும். சர்வதேச சட்டங்களை கடைபிடித்து அண்டை நாடுகளுடன் சமாதானமாக இருப்பதை உறுதி செய்வதற்கான படிப்படியான செயல்முறையை முன்னெடுக்க இந்த கூட்டம் நல்ல தொடக்கமாக அமையும்.

ஐரோப்பிய ஒன்றியம், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, அமெரிக்கா, சீனா மற்றும் பல ஆப்கானிஸ்தான் அண்டைநாடுகள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளன. இவ்வாறு டிகர்லோ தெரிவித்தார்.

இரண்டு தசாப்த கால போரைத்தொடர்ந்து அமெரிக்க மற்றும்நேட்டோ படைகள் வெளியேறியதால் 2021-ல் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றினர். ஆனால் எந்த நாடும் அவர்களை ஆப்கானிஸ்தான் அரசாங்கமாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை. பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகள் அங்கு மறுக்கப்பட்டுள்ளன. மேலும், ஆண் துணை இல்லாமல் பெண்கள் வெளியே செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பெண் உரிமைகள் மறுக்கப்படுவது தொடர்பாக கேள்விகளை ஐ.நா. தலிபான்களிடம் எழுப்ப உள்ளது.



Read More

Previous Post

பங்குச் சந்தையில் புதிய உச்சம்: சென்செக்ஸ் 79,000 தாண்டியது; நிஃப்டி 24 ஆயிரம் கடந்தது | Stock Market Highlight: Markets end record high

Next Post

கடற்படை மாலுமி உயிரிழப்பு; இலங்கையில் கைதான இந்திய மீனவர்கள் 10 பேர் மீது வழக்கு | Makkal Osai

Next Post
கடற்படை மாலுமி உயிரிழப்பு; இலங்கையில் கைதான இந்திய மீனவர்கள் 10 பேர் மீது வழக்கு | Makkal Osai

கடற்படை மாலுமி உயிரிழப்பு; இலங்கையில் கைதான இந்திய மீனவர்கள் 10 பேர் மீது வழக்கு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin