தர்மேந்திர பிரதானை தொடர்ந்து நிதின் கட்கரிக்கும் சிக்கல்? CJP போல உதயமானது E20 ஜனதா கட்சி..!!
இந்தியாவில் ஜென் ஸீ இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் அரசின் செயல்பாடுகளை எதிர்க்க சமூக வலைதளங்களை புதிய ஆயுதமாக பயன்படுத்த தொடங்கியுள்ளனர். அப்படி உதயமான கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தான் ஒரு மத்திய அமைச்சரவையே பதவி விலக வைத்து மத்திய அரசையே பணிய வைத்துள்ளது.
எக்ஸ் தளத்தில் சாதாரணமாக தொடங்கப்பட்டு பெரிய இயக்கமாக மாறி லட்சக்கணக்கான இளைஞ்ரகளை திரட்டி நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி பெரிய போராட்டம் நடத்தியது. கிட்டதட்ட இரண்டு வாரமாக நாடே இது குறித்து தான் பேசியது. போராட்டத்தின் விளவாக கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார்.

சிஜேபி போராட்டம் வாபஸ் பெற்று அமைதி திரும்பும் சூழலில் புது பிரச்சினை உண்டாகி இருக்கிறது. Cockroach Janta Party – CJP ஏற்படுத்திய தாக்கத்தை தொடர்ந்து, தற்போது E20 ஜனதா கட்சி என்ற புதிய அமைப்பு சமூகவலைதளத்தில் உருவெடுத்துள்ளது. இந்தியாவில் பெட்ரோலில் 20% எத்தனால் கலந்து (E20) விற்பனை செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசு இந்த முடிவை கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கவும், விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கவும் எடுத்ததாக கூறுகிறது. இருப்பினும், மக்கள் மத்தியில் இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.
எத்தனால் கலந்த பெட்ரோல் காரணமாக வாகனங்களின் மைலேஜ் குறைவதாக பலரும் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் அரசு அதனை மறுக்கிறது. இந்த சூழலில் உருவான E20 ஜனதா கட்சி, பெட்ரோல் நிலையங்களில் எத்தனால் கலப்பு பெட்ரோலுடன் (E20), சுத்தமான 100% பெட்ரோலை வாங்குவதற்கான விருப்பத்தேர்வை நுகர்வோருக்கு வழங்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளது.
பொதுமக்கள் மானியத்தையோ அல்லது இலவச எரிபொருளையோ கேட்கவில்லை ,நாங்கள் வாங்கும் எரிபொருளை தேர்ந்தெடுக்கும் உரிமை எங்களுக்கு வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை என இந்த அமைப்பு வலியுறுத்துகிறது.
எத்தனால் கலவை குறித்த தெளிவான லேபிளிங், அதன் நன்மைகள் மற்றும் பாதிப்புகள் குறித்த சுதந்திரமான ஆய்வுகளை வெளியிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என இந்த அமைப்பு கோரிக்கை விடுக்கிறது. எத்தனால் பெட்ரோல் தொடர்பான வெளிப்படை தன்மை, இதனால் வாகனங்கலுக்கு என்ன சிக்கல், மக்களுக்கு என்ன லாபம் என்பதை தெளிவுப்படுத்தும் பொறுப்பு அரசுக்கு உள்ளதாக கூறுகிறது.
Nitin Gadkari ji must Resign!
— E20 JANTA PARTY (@E20Party) July 26, 2026 “>
மேலும் எத்தனால் பெட்ரோல் குறித்து தொடர்ந்து கூறி வரும் அமைச்சர் நிதின் கட்கரி பதவி விலக வேண்டும் என்றும் அந்த அமைப்பு எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்த அமைப்பு இன்னும் முறையாக பதிவு செய்யப்படவில்லை என்றாலும், சமூக வலைதளங்களில் மீம்ஸ் பாணியிலான கருத்துகளை பகிர்ந்து மக்களை ஒன்று திரட்டி வருகிறது.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை உச்சநீதிமன்ற நீதிபதி கேலி செய்ததை கண்டித்து உருவான கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை போராட்டத்தை தீவிரப்படுத்தியது. அதே பாணியில், தற்போது E20 ஜனதா கட்சி உருவெடுத்துள்ளதால் அடுத்த இலக்கு நிதின் கட்கரியோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
