Last Updated:
தர்மஸ்தலாவில் பெண்கள் கொன்று புதைக்கப்பட்ட சர்ச்சையில் புதிய திருப்பம். மேலும் 2 நபர்கள் சாட்சிகளாக முன்வந்ததால் பரபரப்பு. 16 இடங்களில் தோண்டியதில் எலும்புகள், சேலைகள் கண்டுபிடிப்பு.
தர்மஸ்தலாவில் பெண்கள் கொன்று புதைக்கப்பட்ட சர்ச்சையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. புதிதாக மேலும் 2 நபர்கள் சாட்சிகளாக இருக்க முன்வந்திருப்பது பரபரப்பை கூட்டி உள்ளது.
கர்நாடக மாநிலம், தர்மஸ்தலா கோயில் நகரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொன்று புதைக்கப்பட்டதாக கோயிலில் பணிபுரிந்த முன்னாள் ஊழியர்கள் கூறியதைத் தொடர்ந்து, மாநில அரசு, 20 அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது. அந்தக் குழுவினர் முன்னிலையில் முன்னாள் ஊழியர் சுட்டிக்காட்டிய 16 இடங்களில் நேத்ராவதி ஆற்றங்கரையில் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.
இதில் சில குழிகளில் பெண்களின் எலும்புக் கூடுகளும், சேலையும் கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகுபலி மலைப்பகுதியிலும் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் பரபரப்பை கூட்டும் விதமாக, மேலும் 2 பேர் சாட்சிகளாக இருக்க முன்வந்துள்ளனர். அவர்கள் புதிதாக பெண்களின் சடலங்கள் புதைக்கப்படுவதை பார்த்ததாக கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
August 10, 2025 5:54 PM IST
தர்மஸ்தலாவில் பெண்கள் கொன்று புதைக்கப்பட்ட வழக்கில் புதிய திருப்பம்… மேலும் 2 சாட்சிகள் பரபரப்பு வாக்குமூலம்!


