தஞ்சோங் காத்தோங்கில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் இருந்து பெண்ணை மீட்ட தமிழ் ஊழியர்களுக்காக உள்ளூர் தொண்டு அமைப்பு ItsRainingRaincoats (IRR) நிதி திரட்டும் பணியைத் தொடங்கியது.
இந்நிலையில், IRR நிர்ணயித்த S$70,000 என்ற இலக்கை தாண்டி நிதி திரட்டப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளன.
4D லாட்டரி மோகம்.. “7217” என்ற எண்ணுக்கு மட்டும் வாடிக்கையாளர்கள் போட்டாபோட்டி – ஏன் தெரியுமா?
தமிழ் ஊழியர்களுக்கு நிதி திரட்டல்
அதன் வலைத்தளத்தின்படி, மொத்தம் 1,639 நன்கொடையாளர்கள் மூலம் சுமார் S$72,241 வெள்ளி திரட்டப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை வெளிநாட்டு ஊழியர் நல தொண்டூழிய அமைப்பான ItsRainingRaincoats இன்று (ஜூலை 30) பேஸ்புக்கில் வெளியிட்டது.
நிதி திரட்ட உதவிய தள செலவுகளைத் தவிர்த்து, அனைத்து நிதியும் மீட்புப் பணியில் ஈடுபட்ட ஊழியர்களிடையே சமமாக பிரிக்கப்படும்.
மேலும் ஒவ்வொரு பங்கும் முழுமையாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்றும் அது கூறியது.
ஊழியர்களின் வீர தீர செயல்
ஊழியர்களின் வீர தீர செயலுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் நோக்கிலும் இந்த நிதி திரட்டல் உருவாக்கப்பட்டது.
வெறும் 24 மணி நேரத்திற்குள் S$24,000 நிதி சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.
ஊழியர்களுடன் பொது சந்திப்பு மற்றும் வாழ்த்து நிகழ்ச்சியை நடத்தவும் IRR ஏற்பாடு செய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.
என்ன நடந்தது?
திடீர் பள்ளம்: பின்னால் வந்த காரில் பதிவான நேரடி காணொளி!
வேலைவாய்ப்பு மற்றும் உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ள Telegram சேனல் – https://t.me/tamilmicsetsg
PHOTOS: Mothership and ItsRainingRaincoat’s website