தஞ்சோங் காத்தோங் பள்ளத்தில் காருடன் விழுந்த பெண் ஓட்டுநரை வெளிநாட்டு ஊழியர்கள் ஓடிச்சென்று மீட்டனர். இந்நிலையில், ஓடி உதவிய 7 தமிழ் ஊழியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது வீரத்துடன் செயல்பட்ட அவர்களுக்கு பாராட்டு நாணயங்களும் பரிசாக வழங்கப்பட்டன.
7 தமிழ் ஊழியர்கள்
பிச்சை உடையப்பன் சுப்பையா, வேல்முருகன், சரவணன், வீரசேகர், அஜித்குமார், சந்திரசேகரன் மற்றும் ராஜேந்திரன் ஆகியோரின் வீர தீர செயலுக்கு “MOM பாராட்டு நாணயம்” அல்லது ACE நாணயம் வழங்கப்பட்டது.
விடுதியில் சந்தித்து பாராட்டு
ஊழியர்களின் வேலைநேரம் முடிந்ததுக்கு பிறகு, அவர்களின் விடுதிக்குச் சென்று பாராட்டு நாணயங்களை வழங்கியதாக மனிதவள துணையமைச்சர் தினேஷ் வாசு தாஷ் தனது ஃபேஸ்புக் பதிவில் பகிர்ந்து கொண்டார்.
சிங்கப்பூர் வெளிநாட்டு சகோதரர்களின் முயற்சியைப் பாராட்டி இந்த சிறிய அன்பளிப்பை வழங்குவதாக அவர் சொன்னார்.
சிறந்த எடுத்துக்காட்டு
பொதுவாக, நம் வெளிநாட்டு ஊழியர்கள் சமூகத்திற்கு எவ்வாறு உதவுகிறார்கள் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று நினைப்பதாக அவர் கூறினார்.
“அவர்கள் சிங்கப்பூரை மேம்படுத்த வேலையிடங்களில் மட்டும் பணிசெய்வதில்லை, மாறாக தேவைப்படும் நேரங்களிலும் பிறருக்காக முன்வந்து உதவுகின்றனர்” என்று பாராட்டினார்.
7 பேரும் வேறு வேறு வழிகளில் ஓடிச்சென்று உதவியதாக சுட்டிக்காட்டிய அவர், அவ்வாறு செய்யவில்லை என்றால் நிலைமை வேறு மாதிரி மாறியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நைலான் கயிற்றை பயன்படுத்தி ஓட்டுநரை மீட்ட ஊழியர்கள்
திடீர் பள்ளம் ஏற்பட்ட சத்தம் கேட்டதாகவும், இதனால் அங்கு வேகமாக ஓடி வந்ததாகவும் தமிழ் ஊழியர் சுப்பையா கூறினார்.
அப்போது அந்த குழியில் கார் ஒன்று விழுந்துக் கிடப்பதையும் அவர் கண்டார், அதுக்குள் இருந்த ஓட்டுநர் காரை விட்டு வெளியேறியதாகவும் அவர் சொன்னார்.
பின்னர் விரைவாகச் செயல்பட்டு, நைலான் கயிற்றை பள்ளத்துக்குள்ளே போடுமாறு சக ஊழியர்கள் மூவரிடம் அவர் அறிவுறுத்தினார்.
இருப்பினும் ஊழியர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது பள்ளத்துக்குள் இறங்க விரும்பினர், ஆனால் அது பாதுகாப்பானதாக இருக்காது என்பதால் அவர் இதனை ஏற்கவில்லை.
அந்தப் பெண்ணை பள்ளத்திலிருந்து வெளியே தூக்கும் அளவுக்கு ஊழியர்கள் அவர்களுக்கு நெருக்கமாக பெண்ணை இழுத்து கொண்டுவந்தனர்.
பின்னர் ஓட்டுநர் மேலே தூக்கப்பட்டு பத்திரமாக காப்பாற்றப்பட்டார், இந்த மீட்பு பணி இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் மட்டுமே ஆனதாக சுப்பையா கூறினார்.
முதலில் பள்ளம் தோன்றியபோது அதனுள் தண்ணீர் நிரம்பவில்லை என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் வேலை இருக்கிறதா? – இழப்புகளை தவிர்க்க கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை
Photos: Dinesh Vasu Dash/Facebook and Mothership website