இதை கருத்தில்கொண்டு, தமிழ்நாட்டில் கடந்த மாதம் (ஜனவரி) 27ஆம் தேதி, பள்ளி குழந்தைகள் மத்தியில் இலவச HPV தடுப்பூசி திட்டத்தை தொடங்கிவைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தனியார் மருத்துவமனைகளில் இந்த ஊசிக்கு ரூ.28,000 செலவாகும் நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் 14 வயதுக்கு உட்பட்ட 3.38 லட்சம் சிறுமிகளுக்கு இலவசமாக செலுத்தப்பட உள்ளது.


