
Last Updated:
Manmohan Singh: மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைந்த போது, இந்தியாவின் 13 ஆவது பிரதமராக மன்மோகன் சிங் பதவியேற்றார்.
மன்மோகன் சிங் தலைமையிலான முதலாவது அமைச்சரவையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரின் இறுதிச் சடங்கு நாளை நடைபெற உள்ளது. இரண்டு முறை மொத்தம் 10 ஆண்டுகள் பிரதமர் பதவி வகித்த பெருமைக்குரியவர் மன்மோகன் சிங்.
மன்மோகன் சிங் தலைமையிலான முதலாவது அமைச்சரவையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. கடந்த 2004 ஆம் ஆண்டு, மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைந்த போது, இந்தியாவின் 13 ஆவது பிரதமராக மன்மோகன் சிங் பதவியேற்றார். அவரது அமைச்சரவையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 பேர் பொறுப்பு வகித்தனர்.
அதன்படி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ப.சிதம்பரம், ஜெயந்தி நடராஜன், மணிசங்கர் ஐயர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சுதர்சன நாச்சியப்பன், ஜி.கே. வாசன், நாராயணசாமி ஆகியோர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் அங்கம் வகித்தனர்.
Also Read | இந்தியாவை மாற்றிய ஒரு போன் கால்.. நம்பாத மன்மோகன் சிங்.. நடந்தது என்ன?
திமுக-வின் டி.ஆர்.பாலு, ஆ. ராசா, தயாநிதி மாறன், சுப்புலட்சுமி ஜெகதீசன், பழனி மாணிக்கம், வேங்கடபதி, ரகுபதி, மு.க. அழகிரி, ஜெகத்ரட்சகன், நெப்போலியன், ராதிகா செல்வி, காந்தி செல்வன் ஆகியோரும் அமைச்சரவையில் இடம் பெற்றனர். அத்துடன் பாமக சார்பில் அன்புமணி, வேலு ஆகியோரும் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தனர்.
இதன்மூலம் பிரதமர் என்பதையும் தாண்டி, தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நண்பராக மன்மோகன் சிங் விளங்கினார்.
Also Read: மன்மோகன் சிங்கின் மூன்று மகள்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா?.. முழு விவரம் இதோ!
Chennai [Madras],Chennai,Tamil Nadu
December 27, 2024 11:43 AM IST

