Last Updated:
காவிரி நீர் மேலாண்மை ஆணையம், தமிழ்நாட்டுக்கு தினமும் 1 டி.எம்.சி. காவிரி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட்டுள்ளது.
காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு 3,500 கன அடி நீர் வீதம் 15 நாட்களுக்கு திறக்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்றுக் குழு முதலில் உத்தரவிட்டது. ஆனால், இதற்கு கர்நாடகா அரசு மறுப்பு தெரிவித்தது. காவிரி நீர் திறக்கப்படாததால், டெல்டா மாவட்டங்களில் நீர் இன்றி விவசாயிகள் கடும் துயரத்திற்கு ஆளாகினர்.


