Last Updated:
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்பது தொடர்பாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் விளக்கம் அளிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் திங்கட்கிழமை மாலை செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.
அசாம், கேரளா, மேற்கு வங்கம் மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த தேதியை தலைமை தேர்தல் ஆணையர் அறிவிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்பது தொடர்பாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் விளக்கம் அளிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் நவம்பரில் சிறப்பு தீவிர திருத்தம் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அது குறித்த அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் வெளியிடலாம் என கூறப்படுகிறது.
அந்த வகையில், 10 முதல் 15 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வது குறித்து அறிவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டமன்ற தேர்தல் நடைபெறும் பிகார் மாநிலத்தில், முதல் முறையாக சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடைபெற்றது. பிகாரில் நடத்தப்பட்டது போல நாடு முழுவதும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
October 26, 2025 9:30 PM IST


