[ad_1]
Last Updated:
மு.க.ஸ்டாலின் லண்டனில் தமிழ்க் கனவு நிகழ்ச்சியில் தமிழர்களை முதலீடு செய்ய அழைத்தார், ஜெர்மனி இங்கிலாந்து சுற்றுப்பயணம் முடித்து சென்னை திரும்புகிறார்.
தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வரும்படி லண்டனில் வசிக்கும் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், லண்டனில் நேற்று நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழர்கள் அறிவில் சிறந்தவர்கள் என்றும் கடுமையான உழைப்பாளிகள் என்றும் அயலக மண்ணில் தமிழ் வம்சாவளியினர் நிரூபித்து வருவதாக பாராட்டு தெரிவித்தார். சாதி, மதம், ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடுகள் நம் இனத்தையே வளர விடாது என்று கூறிய முதலமைச்சர், நம்மைப் பிரிக்கும் நிகழ்வுகளை மறந்து இணைக்கும் நிகழ்வுகளை நினைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
மேலும், அடுத்த தலைமுறை தமிழர்கள் நம்மை விட அதிக உயரத்தில் இருக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் விருப்பம் தெரிவித்தார்.
இந்நிலையில், ஜெர்மனி, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை நிறைவு செய்யும் முதலமைச்சர் நாளை அதிகாலை சென்னை திரும்ப உள்ளார். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர், அளவில்லா அன்பு பொழிந்த உள்ளங்களின் எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
September 07, 2025 3:38 PM IST
“தமிழ்நாட்டில் முதலீடு செய்யுங்கள்…” – லண்டன் வாழ் தமிழர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு