மாவட்ட ஆட்சியரிடம் சொல்லியும் பலன் இல்லை
தமிழ்நாட்டிலேயே கிருஷ்ணகிரி மாவட்டத்தில்தான், அதிக அளவு குவாரிகளுக்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது. இங்குள்ள மலைகள் அதிக அளவில் உடைக்கப்பட்டு, கிடைக்கும் ஜல்லிக்கற்கள், எம்-சாண்ட் உள்ளிட்டவை நாள் தோறும் ஒரு லட்சம் டன் வீதம், கர்நாடக மாநிலத்திற்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. அதேபோல திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகளில் கனிமங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடக்கும் கனிமவளக் கொள்ளை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கூறியும், அவர் குவாரிகளில் ஆய்வு மேற்கொள்ளாமல் இருப்பது வேதனை தருகிறது.

