• Login
Wednesday, May 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கவேண்டும் – பிரதமருக்கு முதல்-அமைச்சர் விஜய் கடிதம்

GenevaTimes by GenevaTimes
May 20, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை, தமிழ்நாட்டிற்கு தேவையான உரங்கள் தடையின்றி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்-மைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

“தமிழ்நாட்டில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் வேளாண்மையை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் சுமார் 48.27 லட்சம் ஹெக்டரில் நிகர சாகுபடியும், 62.25 லட்சம் ஹெக்டரில் மொத்த சாகுபடியும் மேற்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாட்டில் மொத்த விவசாயிகளில் சுமார் 92 சதவீதம் பேர், சிறு மற்றும் குறு விவசாயிகளாவர் என்றும், இந்தியாவின் மொத்த நீர் வளங்களில் 3 சதவீதம் மட்டுமே தமிழ்நாட்டில் இருப்பதாகவும், நெல், சிறுதானியங்கள், எண்ணெய்வித்துகள், பருத்தி,கரும்பு, காய்கறிகள், மலர்கள், பழங்கள், மூலிகை மற்றும் நறுமணப் பயிர்கள், சுவைதாளிதப்பயிர்கள், தோட்டப்பயிர்கள் என பல்வகைப்பட்ட பயிர்களின் சாகுபடி தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

2026-ஆம் ஆண்டு மே மாதம் 10-ஆம் தேதி தமிழ்நாடு முதல்-அமைச்சராக தாம் பொறுப்பேற்றதிலிருந்து, பல்வேறு துறைகளின் செயல்பாடுகளை துறைவாரியாக ஆய்வு செய்து வருவதாகவும், வேளாண்மை உழவர் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்த தனது ஆய்வின்போது, 2026-ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட உரத்தேவையில், 39,001 மெட்ரிக் டன் யூரியா, 28,607 மெட்ரிக் டன் டிஏபி மற்றும் 24,235 மெட்ரிக் டன் பொட்டாஷ் ஆகிய உரங்கள் உர உற்பத்தியாளர்களால் தமிழ்நாட்டிற்கு வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்து அதற்கான விவரங்களையும் கடிதத்துடன் அனுப்பியுள்ளார்.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருவதாலும், காரீப் பருவத்தில் அதிகபட்ச பரப்பில் பயிர் சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் மத்தியில் ஆர்வம் எழுந்துள்ள நிலையில், யூரியா மற்றும் டிஏபி உரங்களின் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இத்தருணத்தில், உரப்பற்றாக்குறை ஏற்பட்டால் மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளது. பல்வேறு சாதகமான காரணிகளால் நடப்பு காரீப் பருவத்தில் பயிர் சாகுபடியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், யூரியா, டிஏபி போன்ற நேரடி உரங்களின் தேவை எதிர்வரும் நாட்களில் கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனை நிறைவு செய்திட 3.83 லட்சம் மெட்ரிக் டன் யூரியா, 1.05 லட்சம் மெட்ரிக் டன் டிஏபி மற்றும் 0.83 லட்சம் மெட்ரிக் டன் பொட்டாஷ் ஆகியவற்றை உடனடியாக தமிழ்நாட்டிற்கு வழங்கிட உரிய அலுவலர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கி குறித்த நேரத்தில் உரங்கள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்”

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

The post தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கவேண்டும் – பிரதமருக்கு முதல்-அமைச்சர் விஜய் கடிதம் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

தங்கம், வெள்ளி விலை ஏன் இறங்குமுகத்திற்குச் சென்றுள்ளது?|Iran War Twist: Oil Drops, Gold Weakens After Trump Remark

Next Post

RR வெற்றியால் CSK-வுக்கு அதிர்ச்சி: பிளேஆஃப் பந்தயத்தில் கடைசி இடத்தை நோக்கி 4 அணிகள் கடும் போட்டி! – Sri Lanka Tamil News

Next Post
RR வெற்றியால் CSK-வுக்கு அதிர்ச்சி: பிளேஆஃப் பந்தயத்தில் கடைசி இடத்தை நோக்கி 4 அணிகள் கடும் போட்டி! – Sri Lanka Tamil News

RR வெற்றியால் CSK-வுக்கு அதிர்ச்சி: பிளேஆஃப் பந்தயத்தில் கடைசி இடத்தை நோக்கி 4 அணிகள் கடும் போட்டி! - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin