கோயம்புத்தூரில் இருந்து சிங்கப்பூருக்கு இயக்கப்பட்டு வந்த விமான சேவையை நிறுத்தவுள்ளதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது என தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதாவது கோவை-சிங்கப்பூர் இடையிலான நேரடி விமான சேவை 2025 டிசம்பர் முதல் ரத்து செய்யப்படலாம் என கூறப்பட்டுள்ளன.
சிங்கப்பூர் குடியுரிமை, நிரந்தரவாசம் பெற்ற ஊழியர்கள் – துணை பிரதமர் சொன்ன பதில்
கோவையிலிருந்து இரவு 8 மணிக்கு புறப்படும் இந்த விமான சேவைக்கு போதிய வரவேற்பு இல்லாததால் ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளன.
இதற்கு பதிலாக ஆந்திரா மாநிலம் விஜயவாடா பகுதியில் இருந்து சிங்கப்பூருக்கு இண்டிகோ விமானம் இயக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த சேவை விரைவில் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், கோவை-சிங்கப்பூர் இடையே ஸ்கூட் விமானம் தொடர்ந்து சேவை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு பணிப்பெண்கள் தொடர்பான விதிமீறல்.. பிடிபட்ட முதலாளிகள்