• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

தமிழ்நாடு – நாகாலாந்து ஆட்டம் டிராவில் முடிந்தது | Ranji Trophy Highlights TN vs Nagaland

GenevaTimes by GenevaTimes
October 29, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
தமிழ்நாடு – நாகாலாந்து ஆட்டம் டிராவில் முடிந்தது | Ranji Trophy Highlights TN vs Nagaland
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெங்​களூரு: ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரில் ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள தமிழ்​நாடு – நாகாலாந்து அணி​கள் இடையி​லான ஆட்​டம் பெங்​களூரு​வில் நடை​பெற்று வந்​தது. இதன் முதல் இன்​னிங்​ஸில் தமிழ்​நாடு அணி 115 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 512 ரன்​கள் குவித்து டிக்​ளேர் செய்​தது. பிரதோஷ் ரஞ்​ஜன் பால் 201 ரன்​களும், விமல் குமார் 189 ரன்​களும் விளாசினர்.

இதையடுத்து விளை​யாடிய நாகாலாந்து 3-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 127 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 365 ரன்​கள் எடுத்​தது. தேகா நிஸ்​சல் 161 ரன்​களும், இம்​லிவதி லெம்​தூர் 115 ரன்​களும் சேர்த்து களத்​தில் இருந்​தனர். நேற்று கடைசி நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய நாகாலாந்து அணி 157.4 ஓவர்​களில் 446 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழந்​தது. தேகா நிஸ்​சல் 175 ரன்​களும், இம்​லிவதி லெம்​தூர் 146 ரன்​களும் சேர்த்து ஆட்​ட​மிழந்​தனர்.

தமிழ்​நாடு அணி தரப்​பில் குர்​ஜப்​னீத் சிங் 5, சந்​திரசேகர் 3 விக்​கெட்​களை வீழ்த்​தினர். நாகாலாந்து அணி இன்​னிங்ஸ் முடிவடைந்​ததும் ஆட்​டத்தை டிரா​வில் முடித்​துக்​கொள்ள இரு அணி​களின் கேப்​டன்​களும் சம்​மதம் தெரி​வித்​தனர். முதல் இன்​னிங்​ஸில் முன்​னிலை பெற்​றதன் மூலம் தமிழ்​நாடு அணிக்கு 3 புள்​ளி​கள்​ வழங்​கப்​பட்​டது.

பெங்​கால் வெற்றி: பெங்​கால் – குஜ​ராத் அணி​கள் இடையி​லான போட்டி கொல்​கத்​தா​வில் நடை​பெற்​றது. கடைசி நாளான நேற்று 327 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த குஜ​ராத் அணி 45.5 ஓவர்​களில் 185 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. விக்​கெட் கீப்​பர் பேட்​ஸ்​மே​னான உர்​வில் படேல் 124 பந்​துகளில் 16 பவுண்​டரி​களு​டன் 109 ரன்​கள் விளாசி ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார். அவருக்கு அடுத்​த​படி​யாக ஜெய்​மீத் படேல் 45, ஆர்யா தேசாய் 13 ரன்​கள் சேர்த்​தனர்.

6 பேட்​ஸ்​மேன்​கள் டக் அவுட் ஆனார்​கள். பெங்​கால் அணி தரப்​பில் முகமது ஷமி 10 ஓவர்​களை வீசி ஒரு மெய்​ட​னுடன் 38 ரன்​களை வழங்கி 5 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். முதல்தர கிரிக்​கெட் போட்​டி​யில் முகமது ஷமி 4 வருடங்​களுக்கு பிறகு தற்​போது​தான் 5 விக்​கெட்​களை வீழ்த்​தி​யுள்​ளார். ஷாபாஷ் அகமது 3 விக்​கெட்​கள் கைப்​பற்​றி​னார். 141 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற பெங்​கால் அணி முழு​மை​யாக 6 புள்​ளி​களை பெற்​றது.

அந்த அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது.

செய்தித்துளிகள்: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் குவாஹாட்டியில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் முதல் அரை இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

2028-ம் ஆண்டு ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப், 2026-ம் ஆண்டு ஆசிய தொடர் ஓட்டம் ஆகியவற்றை நடத்துவதற்கான உரிமையை கோரியுள்ளது இந்திய தடகள சங்கம். இதில் உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப்பை புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஹாங்காங்கில் வரும் டிசம்பர் 10 முதல் 14-ம் தேதி வரை நடைபெறும் டபிள்யூடிடி பைனல்ஸ் டேபிள் டென்னிஸ் தொடரில் விளையாடுவதற்கு இந்தியாவின் கலப்பு இரட்டையர் ஜோடியான தியா சித்லே-மனுஷ் ஷா ஜோடி தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது.

சென்னை நேரு விளையாட்டரங்கில் 7-வது மாநில ரேங்கிங் டேபிள் டென்னிஸ் தொடர் நடைபெற்றது. இதில் ஆடவர் பிரிவில் சென்னை அச்சீவர்ஸ் அகாடமியை சேர்ந்த பி.பி.அபிநந்தும், மகளிர் பிரிவில் எஸ்.கே.அகாடமியை சேர்ந்த எஸ்.யாஷினியும் சாம்பியன் பட்டம் வென்றனர்.

யு-20 மகளிர் கால்பந்து நட்புரீதியிலான போட்டியில் இந்தியா – கஜகஸ்தான் அணிகள் மோதிய 2-வது மற்றும் கடைசி ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.



Read More

Previous Post

ChatGpt Go | ‘சாட்ஜிபிடி கோ’ சேவை ஓராண்டுக்கு இலவசம்.. ஓபன் ஏஐ நிறுவனம் அறிவிப்பு! | இந்தியா

Next Post

PM Kisan Diwali Payment | பி.எம்.கிசான் தீபாவளி பரிசு… விவசாயிகளுக்கு பண்டிகை மகிழ்ச்சியை தரும் திட்டம்…! | வணிகம்

Next Post
PM Kisan Diwali Payment | பி.எம்.கிசான் தீபாவளி பரிசு… விவசாயிகளுக்கு பண்டிகை மகிழ்ச்சியை தரும் திட்டம்…! | வணிகம்

PM Kisan Diwali Payment | பி.எம்.கிசான் தீபாவளி பரிசு... விவசாயிகளுக்கு பண்டிகை மகிழ்ச்சியை தரும் திட்டம்...! | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin