சென்னை: 71-வது தமிழ்நாடு சீனியர் வாலிபால் சாம்பியன்ஷிப் சென்னையில் நடைபெற்றது. இதில் மகளிர் பிரிவு இறுதிப் போட்டியில் சென்னை ஐசிஎஃப் 25-21, 25-9, 25-14 என்ற செட் கணக்கில் டாக்டர் சிவந்தி கிளப் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
ஆடவர் பிரிவு இறுதிப் போட்டியில் சென்னை ஐஓபி 25-22, 25-22, 25-21 என்ற செட் கணக்கில் எஸ்ஆர்எம் ஐஎஸ்டி அணியை தோற்கடித்து பட்டம் வென்றது. பட்டம் வென்ற அணிகளுக்கு கோப்பையுடன் தலா ரூ.25 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. 2-வது இடம் பிடித்த அணிகளுக்கு தலா ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டது.
பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு வாலிபால் சங்கத்தின் தலைவர் பொன் கவுதம் சிகாமணி, வருமான வரித்துறை ஆணையர் பாண்டியன், எஸ்என்ஜே குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஜெயமுருகன், ஜிஎஸ்டி ஆணையர் மாணிக்கவேல், ரோமா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ராஜன், தமிழ்நாடு வாலிபால் சங்கத்தின் பொருளாளர் செல்வகணேஷ், பொதுச் செயலாளர் மார்ட்டின் சுதாகர், ஆலோசகர் தினகர், சென்னை மாவட்ட வாலிபால் சங்கத்தின் செயலாளர் கேசவன், போட்டி ஏற்பாட்டாளர்கள் ஜெகதீசன், பழனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.