Last Updated:
ராகுல் காந்தி தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாளையே நடைபெறும் என அறிவிப்பு, கூட்டணி மற்றும் தேர்தல் வியூகங்கள் விவாதிக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி நாளை மறுநாள் நடத்த இருந்த ஆலோசனைக் கூட்டம் ஒரு நாள் முன்னதாக நாளையே நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கூட்டணிப் பேச்சுவார்த்தை மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து விவாதிக்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முக்கியத் தலைவர்களுக்கு கட்சி மேலிடம் அழைப்பு விடுத்து இருந்தது. அதன்படி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் மேலிடப் பொறுப்பாளர்கள் நாளை மறுநாள் டெல்லியில் ஆலோசனை நடத்த திட்டமிட்டு இருந்தனர்.
இந்நிலையில், இந்த கூட்டம் ஒரு நாள் முன்னதாக அதாவது நாளையே நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, யாருடன் கூட்டணி, ஆட்சி அதிகாரத்தில் பங்கு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலோசனைக்குப் பிறகு திமுகவுடன் கூட்டணியா என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்.. மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி நாளை மறுநாள் ஆலோசனை!


