“உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘2026-ல் தமிழ்நாட்டில் நாங்கள் ஆட்சி அமைப்போம்’ என நாடாளுமன்றத்திலும், தமிழ்நாட்டுக்கு வந்தபோதும் கூறி உள்ளார். ஆனால், நான் அவருக்கு ஒரு சவால் விடுக்க விரும்புகிறேன். தமிழ்நாடு எப்போதும் டெல்லியின் ஆளுகைக்கு அடிபணியாது. எங்களுக்கு தனித்தன்மையும், தனி குணமும் உண்டு. மற்ற மாநிலங்களில் கட்சிகளை உடைத்து, மிரட்டி ஆட்சி அமைக்கும் உங்கள் உத்தி தமிழ்நாட்டில் வேலை செய்யாது. 2026-லும் திராவிட மாடல் ஆட்சிதான் தொடரும். தமிழ்நாடு எப்போதும் டெல்லிக்கு ‘அவுட் ஆஃப் கண்ட்ரோல்’தான். உங்கள் கூட்டணிகளையும், பரிவாரங்களையும் அழைத்து வந்து முயற்சி செய்து பாருங்கள், யார் வெல்கிறார்கள் என்பதை பார்ப்போம்.”

