முல்லைத்தீவில் (Mullaitivu) கிணறு ஒன்றிலிருந்து பெருமளவிலான தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு காவல்துறையினர் தெரிவித்தனர்.
புதுக்குடியிருப்பு – தேவிபுரம் பகுதியில் உள்ள கிணற்றில் இருந்தே 992 தோட்டாக்கள் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தோட்டாக்கள் மீட்பு
குறித்த கிணறு அமைந்துள்ள காணியின் உரிமையாளர், பழைய கிணற்றை துப்புரவு செய்யும் போதே குறித்த தோட்டாக்கள் காணப்பட்டுள்ளன.

பின்னர் இது குறித்து புதுக்குடியிருப்பு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் குறித்த தோட்டாக்கள் போரின் போது பயன்படுத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |

