• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தமிழர் பகுதியில் இளைஞன் கொடூரமாக வெட்டிக்கொலை – மோப்பநாய் உதவியுடன் விசாரணை

GenevaTimes by GenevaTimes
August 9, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
தமிழர் பகுதியில் இளைஞன் கொடூரமாக வெட்டிக்கொலை – மோப்பநாய் உதவியுடன் விசாரணை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கொக்குத்தொடுவாய் களப்பு கடற்கரையில் தொழிலுக்காகச் சென்ற இளைஞன் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (08) அதிகாலை கொக்குத்தொடுவாய் கோட்டைக்கேணி பிள்ளையார் கோயிலுக்கு 300 மீற்றர் தொலைவில் களப்பு கடற்கரையில் இருந்து 50 மீற்றர் தொலைவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொக்குத்தொடுவாய் வடக்கைச் சேர்ந்த 21 வயதுடைய ஜெயராஜ் சுபராஜ் என்பவரே உயிரிழந்துள்ளார்

அடையாளம் தெரியாத நபர்


சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், நேற்று முன்தினம் (07) இரவு தொழிலுக்காகச் சென்ற இளைஞன், இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்த போது, பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர்களால் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.


அதிகாலை 2:30 மணியளவில், தொழிலுக்காக வந்த மற்றொரு நபர், குறித்த இளைஞன் வீதியில் வீழ்ந்து கிடப்பதைக் கண்டுள்ளார்.

அப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகம் என்பதால், யானை தாக்கியிருக்கலாம் என சந்தேகித்து, இளைஞனின் தந்தையையும் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவரையும் அழைத்து வந்து பார்த்தபோது, உடலில் வெட்டுக்காயங்கள் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, கொக்குளாய் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர விசாரணையை ஆரம்பித்தனர்.

மோப்பநாய் உதவியுடன் தீவிர விசாரணை



முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் சம்பவ இடத்திற்கு வருகை தந்து, சடலத்தை பார்வையிட்டு, மோப்பநாய் உதவியுடன் தடயங்களை சேகரிக்கவும், கைரேகை பரிசோதனை மேற்கொள்ளவும், உடற்கூறு பரிசோதனைக்குப் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்கவும் காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.



காவல்துறையினர் மற்றும் தடயவியல் குழுவினர் மோப்பநாய் உதவியுடன் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



மேலும், இளைஞனின் மாமனார் விசாரணைக்காக காவல்துறை நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

கொலைக்கான காரணம் மற்றும் குற்றவாளிகள் யார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.



இச்சம்பவத்தில், இவர் சிறந்த மரதன் ஓட்ட வீரராகவும், வடமாகாணத்தில் பல சாதனைகளைப் புரிந்தவராகவும் அறியப்படுகிறார்.

Read More

Previous Post

சிங்கத்தின் ஆட்டம் விரைவில்: சிம்பு- வெற்றிமாறன் பட அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் | Makkal Osai

Next Post

வாக்கு திருட்டு குற்றச்சாட்டு; தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் காந்தி 5 கேள்விகள் | இந்தியா

Next Post
வாக்கு திருட்டு குற்றச்சாட்டு; தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் காந்தி 5 கேள்விகள் | இந்தியா

வாக்கு திருட்டு குற்றச்சாட்டு; தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் காந்தி 5 கேள்விகள் | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin