• Login
Friday, August 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

தமிழரா.. தெலுங்கரா? – குகேஷின் பூர்வீகம் எது?விவாதத்துக்கு வித்திட்ட இரு முதல்வர்கள்! – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
December 13, 2024
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
தமிழரா.. தெலுங்கரா? – குகேஷின் பூர்வீகம் எது?விவாதத்துக்கு வித்திட்ட இரு முதல்வர்கள்! – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 18 வயதில் பட்டம் வென்ற குகேஷ் தமிழரா அல்லது தெலுங்கரா என்கிற சர்ச்சை எழுந்துள்ளது.

சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் மற்றும் நடப்பு சாம்பியன் டிங் லிரென் இடையே கடுமையான போட்டி நிலவி வந்தது. 13வது சுற்று வரை இருவரும் சம புள்ளிகளில் இருந்ததால் டிராவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று நடந்த 14வது சுற்றில் அற்புதமாக விளையாடிய குகேஷ் 58வது நகர்த்தலில் நடப்பு சாம்பியன் டிங் லிரெனை வீழ்த்தி, 18 வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் வென்ற வீரர் என்கிற சாதனையைப் படைத்தார்.

விளம்பரம்

இவரின் சாதனையைப் பாராட்டி தமிழக முதல்வர் தனது எக்ஸ் பதிவில், “உங்கள் சாதனை இந்தியாவின் செஸ் பாரம்பரியத்தைத் தொடர்வதோடு, சென்னை உலக செஸ் தலைநகராக அதன் இடத்தை மீண்டும் உறுதிப்படுத்த உதவியுள்ளது. உங்களை நினைத்து தமிழகம் பெருமை கொள்கிறது.” என்று தெரிவித்திருந்தார்.

இதற்கடுத்த இரண்டாவது நிமிடம், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, “நமது சொந்த தெலுங்கு பையன் குகேஷுக்கு வாழ்த்துக்கள். 18 வயதில் உலகின் செஸ் சாம்பியனாக சிங்கப்பூரில் வரலாற்றை மாற்றி எழுதியுள்ளார். குகேஷ், உங்கள் அசாத்திய சாதனையை ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடுகிறது. வரும் தசாப்தங்களில் நீங்கள் இன்னும் பல வெற்றிகளையும் பாராட்டுகளையும் பெற வாழ்த்துகிறேன்!” என்று பாராட்டியிருந்தார்.

விளம்பரம்

இரண்டு மாநில முதல்வர்களின் இந்தப் பதிவுகளை அடுத்து குகேஷ் யார்? அவரது தாயகம், மொழி எது, அவர் தமிழா அல்லது தெலுங்கா என்று இணையத்தில் வார்த்தைப் போர் தொடங்கியுள்ளது.

Congratulations to @DGukesh on becoming the youngest-ever World Chess Champion at 18!

Your remarkable achievement continues India’s rich chess legacy and helps Chennai reaffirm its place as the global Chess Capital by producing yet another world-class champion.

Tamil Nadu is… pic.twitter.com/pQvyyRcmA1

— M.K.Stalin (@mkstalin) December 12, 2024

விளம்பரம்

ஒரு எக்ஸ் தள பயனர், “இந்தக் கேள்வியைக் கூட கேட்கும் உங்கள் துணிச்சலைப் பாராட்ட வேண்டும். குகேஷுக்காக தமிழக அரசு என்ன செய்தது என்பதற்கு இது ஒரு உதாரணம்” என்று கூறி கூடவே, தமிழக அரசு குகேஷுக்கு ரூ.75 லட்சம் நிதியுதவி அளித்த சான்றுகளைப் பதிவிட்டுள்ளார்.

விளம்பரம்

மற்றொரு பயனரோ, “செஸ் கிராண்ட்மாஸ்டர் குகேஷ் தமிழகத்தால் ஆதரிக்கப்பட்டவர். ஒரு திறமையை வளர்க்க தமிழர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை இப்போது தெலுங்கு மாநிலங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

இன்னொரு பயனரோ, “குகேஷ் ஒரு தமிழர். தமிழ்நாட்டின் செஸ் கலாச்சாரம், தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு மட்டுமே அவரது வெற்றிக்கு உறுதுணையாக இருந்தன. வேறு எந்த மாநிலமும் அவரது வெற்றியை கடன் வாங்க முடியாது. எல்லைகளைக் கடந்து குகேஷ் ஒரு இந்தியர். அப்படிப்பட்டவரின் பூர்வீகம் மற்றும் சாதியைக் கண்டறிவது வேடிக்கையானது.” என்று காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.

விளம்பரம்

Hearty congratulations to our very own Telugu boy, Indian Grandmaster @DGukesh, on scripting history in Singapore by becoming the world’s youngest chess champion at just 18! The entire nation celebrates your incredible achievement. Wishing you many more triumphs and accolades in… pic.twitter.com/TTAzV9CRbX

— N Chandrababu Naidu (@ncbn) December 12, 2024

விளம்பரம்

இப்படி குகேஷை குறிப்பிட்டு அவர் தமிழரா அல்லது தெலுங்கரா ஒரு பக்கம் சண்டைகள் வலுவடைய மற்றொரு பக்கம் அவர் மொழி, இன, மாநில எல்லைகளைக் கடந்து அனைவரும் கொண்டாட வேண்டிய இந்தியர் என்றும் சிலர் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

Also Read | Allu Arjun Arrest: நடிகர் அல்லு அர்ஜுன் கைது.. ஹைதராபாத் போலீஸ் அதிரடி.. பின்னணி இதுதான்!

குகேஷ் யார்?

விவாதங்களுக்கு அப்பால், குகேஷின் உண்மையான பெயர் குகேஷ் தொம்மராஜு. இவர் தெலுங்கு பாரம்பரியத்தைச் சேர்ந்தவர் என்றாலும் பிறந்து வளர்ந்து அனைத்தும் சென்னையில் தான். இவரின் பெற்றோர்கள் சென்னையில் தான் மருத்துவத்துறையில் பணிபுரிந்து வருகின்றனர். குகேஷின் செஸ் ஆசைக்கு விதை போட்டதும் தமிழகம் தான், அதற்கு உரம் போட்டதும் தமிழகம் தான்.

சென்னையில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியைப் பார்த்து ஊக்கம் பெற்று தான் செஸ் விளையாட்டுக்குள் நுழைந்தார். அதனை நேற்றைய வெற்றி உரையிலும் தமிழில் குறிப்பிட்டார் குகேஷ். அவரை அதிகமாக தற்போது கொண்டாடுவதும் தமிழகம் தான். உலக செஸ் சாம்பியன்ஷிப் வென்ற குகேஷுக்கு தமிழக அரசு ரூ.5 கோடி பரிசு அறிவித்திருப்பது அதற்கு ஓர் சான்று.

.



Read More

Previous Post

எதிர்க்கட்சிகள் அமளி: மாநிலங்களவை டிச.16-க்கு ஒத்திவைப்பு!

Next Post

ayyappa-swamy-season-temporary-dress -shops-in-ramanathapuram mnj pdp – News18 தமிழ்

Next Post
ayyappa-swamy-season-temporary-dress -shops-in-ramanathapuram mnj pdp – News18 தமிழ்

ayyappa-swamy-season-temporary-dress -shops-in-ramanathapuram mnj pdp – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin