அனைத்து சமூகத்தினருக்கும் கல்விச் சாலைகளில் இடம் கிடைக்க, இடஒதுக்கீட்டை உயர்த்தினார். இப்படி, ஏராளமான போராட்டங்கள் நிறைந்தது நம்முடைய கல்விப் பயணம்! இந்தப் பயணத்தை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு போகத்தான், நம்முடைய திராவிட மாடல் அரசு நான்கு ஆண்டுகளாக புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம், மாடல் ஸ்கூல்ஸ், ஸ்மார்ட் வகுப்பறைகள், விளையாட்டுத் துறைக்கு சிறப்பு கவனம் செலுத்தும் திட்டங்கள் என்று ஏராளமான திட்டங்களை கொண்டு வந்து கொண்டிருக்கிறோம்!